பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

153



❖ லூயி பாஸ்டிர் தாம் கண்டுபிடித்த முறையை நூலாக வெளியிட்டார். அந்த நூலைப் படித்த சிலர், ஒயினைப் போன்ற பொருட்களைச் சூடாக்கும்போது அதன் சுவை, மனம் கெட்டுப்போகும். அதனால் விற்பனை பாதிக்கும் என்ற எதிர்ப்பைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் எழுப்பினார்கள்.

❖ அதற்கு பதிலளித்த லுயி, ஒயின் போன்ற திரவப் பொருட் களைச் சூடாக்கினால், அவற்றின் மணம் சுவை கெடாது, மாறாக, சுவையும் மணமும் அதிகமாகும் என்பதைச் சோதனை மூலம் நிரூபணம் செய்துகாட்டினார்.

❖ அந்தச் சோதனைக்குப் பிறகுதான் ‘பாஸ்டியர் முறை’ என்ற அந்த முறையை தொழிலக உரிமையாளர்கள் பின்பற்றி, பெருத்த லாபம் அடைந்தார்கள்.

❖ இப்போது பால் பண்ணைகளில் தயாராகும் பாலுக்கும் பாஸ்டியர் முறையையே ஒவ்வொரு நாடும் பின்பற்றிக் கொண்டு வாழ்கின்றது.

❖ பாட்டில்களில் அடைக்கப்படும் பொருட்களுக்கு எல்லாம் பாஸ்டியர் முறையே தற்போது பாதுகாப்பு உணவாக நடமாடிட பயன்படுகின்றன.

❖ இந்த முறை உலகமெலாம் இன்று பரவி, பெரும்புகழ் பெற்றுள்ளது. பெரும்பொருளை வணிகத் துறையில் ஈட்டித் தருகின்றது. வாணிகமும் முன்னேறி வருகின்றது.

‘லூயி பாஸ்டியர் முறை’ என்ற முறையைப் பற்றி அவர் எழுதிய நூல் பிரெஞ்சு விஞ்ஞானக் கழகத்தவர்களால் பாராட்டப்பட்டு தங்கப் பதக்கம் பரிசும் வழங்கப்பட்டது.

லூயி பாஸ்டியர் அந்த பரிசை பெற்றபோது அவருக்கு என்ன வயது தெரியுமா? நாற்பத்தைந்து! அதற்குப் பிறகே லூயி பாஸ்டியரை பிரெஞ்சு விஞ்ஞானக் கழகம் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது.

லூயி பாஸ்டியர் பிரெஞ்சு விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினரான பின்பு, ஃபிரான்ஸ் நாட்டில் பட்டு நூல்களைத் தரும் பட்டுப் பூச்சிகளுக்கு ஒருவித நோய் ஏற்பட்டுவிட்டது.