உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மருத்துவ விஞ்ஞானிகள்


ஜெர்மன் தனது தாய் நாடு மீது போர் தொடுத்த வெறுப்பால், அது தன்னைப் பாராட்டிக் கொடுத்த டாக்டர் பட்டத்தையே தூக்கி எறிந்தவர். அவரா இத்தாலிப் பதவிகளையும், பரிசுகளையும் கெளரவங்களையும் ஏற்பார்?

அதனால் இத்தாலி நாட்டு அரசும் - அதனைச் சார்ந்த பல்கலைக் கழகமும் வழங்கிய பரிசுகள், பதவிகள், விருதுகள் எல்லாவற்றையும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார் - லூயி பாஸ்டியர்! ஜெர்மன் நாடு பீர், ஒயின் என்ற மதுபானம் தயாரிப்பதில் ஃபிரான்சை விடப் புகழ்பெற்றிருந்தது. அதனால், ஜெர்மனி யுடைய ஒயின் தயாரிப்புப் புகழைத் தகர்த்தெறிந்து, அந்த பெயரையும் மதிப்பையும் ஃபிரான்ஸ் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், மணமும் - சுவையுமிக்க பீர் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் லூயி ஈடுபட்டார்.

இலண்டன் மாநகர் சென்றார். பீர் தயாரிக்கும் செய்திகளை அறிந்தர்! தயாரிக்கும் செய்திகளை அறிந்தார்! திரும்பி ஃபிரான்ஸ் வந்து ஜெர்மனியை விடச் சிறந்த பீர் தயாரிக்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். ஃபிரான்ஸ் - ஜெர்மன் போர் முடிந்தது. அதனால் லூயி பாஸ்டரும் அமைதி பெற்றார். மீண்டும் தனது ஆராய்ச்சிக் கூட்டத்திலே அமர்ந்து கால் நடைகளைப் பற்றி நோய்கள் என்ன என்பதைக் கண்டறியத் திட்டமிட்டார்.

அதற்கேற்றார் போல, லூயி பாஸ்டியரின் இரண்டு பெண்கள் அடுத்தடுத்த ‘டைபாயிடு’ என்று கூறப்படும் காய்ச்சலிலே மாண்டார்கள். தீராத மனவேதனையை மகள்களது நோய் அவருக்கு உண்டாக்கி விட்டதால், பாஸ்டியர் கவனம் நோய்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி விட்டது.

நோய்கள் உண்டாவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்; அந்தக் கிருமிகள் மற்றவர்கள் மேலும் தொற்றுகின்றன. அதனால் வியாதிகள் பரவுகின்றன என்ற வியாதிகளின் அடிப்படை உண்மைகளை உணர்ந்தார். வியாதிகள் பரவும் இந்தக் காரணத்தை, லூயி பாஸ்டியர் வெளியே கூறினாரோ - இல்லையோ, வழக்கம் போல சில அறிவியல் ஆய்வாளர்கள் சிரித்தார்கள்! சிரித்தார்கள் என்றால் கேலிக் கூத்தாடினார்கள்.