பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மருத்துவ விஞ்ஞானிகள்


வேழத்தைக் கொள்வது என்றால், எந்த இடத்தில் அம்பை எய்ய வேண்டும் என்பதைச் சிவப்பு வண்ணத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் - அந்த ஒவியத்தில்.

இதுபோலவே, திருவள்ளுர் மாவட்டத்திலே உள்ள திண்ணணுர் எனப்படும் திருநின்ற ஊரிலுள்ள சிவாலயப் பெருமான் பெயர் இருதயாலேஸ்வரர் என்று புராணம் கூறுகிறது. தஞ்சை மாவட்டத்திலே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தியநாத சுவாமி என்ற இறைவன் இருப்பதை நாம் இதுவரை அறிந்திருந்தோம்.

இறைவன் பெயரும் இருதயாலேஸ்வரரே!

ஆனால், திருநின்றவூர் இறைவனுக்குரிய பெயரே இருதயாலேஸ்வரர் என்று நாம் கேள்விப்பட்டபோது, இறைவனுக்கே இதயம் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்த மக்களின் இதய வேட்கையை நம்மால் எண்ணிப் பார்த்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

இவ்வளவு ஏன், கோவில்கள் அதிகமாகக் காணப்படும் ஊர் என்று போற்றப்படும் காஞ்சிபுரம் நகரில், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில், இராஜசிம்ம பல்லவன் என்ற மன்னன் கைலாச நாதர் என்ற ஒரு திருக்கோயிலை பிரமிக்கத் தக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் எழுப்பினான். இன்றும் அந்தக் கோவிலைக் காஞ்சிபுரம் செல்வோர் காணலாம்.

பூசலார்நாயனார் : இதயமே கோவில்!

அந்தத் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் முன்னாள் இரவில் இறைவன் இராஜசிம்மன் கனவில் தோன்றி, “நமது பக்தர் பூசலார் நாயனார் திருநின்றவூரில் நீண்ட நாட்களாக ஓர் ஆலயம் எழுப்பியுள்ளார். நாம் அங்கே நாளை செல்வதால், தங்களது திருக்கோவில் கும்பாபிஷேகத்தை வேறோர் நாளைக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டார்.