பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

159அதற்கு மேல் தான் தனது ஆய்வில் அவர் தீவிரவாதியானார். அதாவது, மக்களுக்காக தனது ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருந்த லூயி பாஸ்டியர், இப்போது கால்நடை பிராணிகளான மாடு, ஆடு, பன்றி, கோழி போன்ற இனங்களுக்கு வரும் நோய் பற்றியும் ஆராய முற்பட்டார்!

ஆந்தராக்ஸ் என்பது ஒரு பயங்கரமான நோய்! அந்த நோய்க்கு அப்போது கணக்கற்ற ஆடு, மாடுகள், இறந்து கொண்டே இருந்தன. அந்த வியாதிவந்த எந்த மாடும், ஆடும் உயிர் பிழைப்பதில்லை என்ற முடிவுக்கே அரசும் வந்தது; சிகிச்சை முறையும் திணறியது.

ஆந்தராக்ஸ் நோய் என்றால் என்ன? அன்றுவரை அந்த கால்நடை வியாதிக்கு மருந்ததே இல்லையா? என்று சிலர் கேட்கக் கூடுமல்லவா? ஆந்தராக்ஸ் என்ற நோய் கண்ட ஆடோ - மாடோ பிழைப்பதே அரிது. அந்த வியாதி வந்த ஆடு, மாடுகள் முதலில் மூச்சு விடவே முடியாது; திணறும்; உடனே அவை ரத்த வாந்தி எடுக்கும். நடை தளரும் நடக்க முடியாமல் தரையில் உடல் தளர்ந்து வீழும்; பிறகு சாகும். இதுதான் ஆந்த்ராக்ஸ் நோய் காணும் கால்நடைகளின் நிலை. என்வே அந்த நோய் என் வருகிறது? என்ன காரணம் என்பதே அன்று வரை எவராலும், எந்த விஞ்ஞான வித்தகராலும் கண்டறியப்பட வில்லை.

ஆந்தாராக்ஸ் என்ற நோய் வந்தால், விவசாயப் பெருமக்கள்தான் அல்லோல கல்லோலப் பட்டு - சிகிச்சை தேடிை எங்கெங்கோ ஓடுவார்கள். காரணம்; அவர்கள்தானே கால்நடை களை நம்பி வாழும் ஏழைகள்? அதனால், அவர்கள்தான் ஆடு, மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் வந்தால், முதலில் பீதியடைவார்கள்; கிலி கொள்வார்கள்; காரணம், விவசாய நஷ்டம் அவர்களுக்குத் தானே போய் சேரும்.

எனவே, ஆடு, மாடுகளுக்கு வரும் நோய், விவசாயிகளைத் தான் வாட்டி வதைக்கும்; நாளுக்கு நாள் நட்டங்களைப் பெருக்கும்; கடனாளிகளாகி விவசாயத்தை வீணாக்கும்; பாதிக்கும் படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகள் - இந்த நோய் ஏதோ ஒரு தெய்வ குற்றத்தால் வரும் கோமாரி போன்ற நோயாக