பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மருத்துவ விஞ்ஞானிகள்


விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் எண்ணற்றோர் லூயி பாஸ்டியரை நேரில் சென்று சந்தித்துப் பாராட்டினார்கள்; பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்கள்!

விவசாயத் தொழிலால் நட்டமடைந்த கால்நடை இழப்பாளர்கள் ஒன்றுகூடி, லூயி பாஸ்டியருக்கு உருவச் சிலைகளை நிறுவினார்கள் - அவரவர் விரும்பிய இடங்களிலே - ஊர்களிலே பிரெஞ்சு விஞ்ஞானக் கழகம், லூயியை வீடு தேடிச் சென்று, பதக்கம் பரிசளித்ததோடு நில்லாமல், அந்த ஊர் மக்களைத் திரட்டி பாராட்டுக் கூட்டமும் நடத்திப் புகழாரம் சூட்டியது.

இலண்டன் மாநகர், லூயி பாஸ்டியரை வரவேற்றது; பாராட்டியது; பரிசளித்தது; பட்டங்கள் அளித்தது. இலண்டன் நகருக்கு வருகை தந்த லூயி பாஸ்டியரைக் கண்ட வியாபார நிறுவன மக்கள் 500 பவுன்களைப் பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்கள். எல்லாவற்றுக்கும் சிகரமாக, பிரெஞ்சு அரசு லூயி பாஸ்டியருக்கு வழங்கி வந்த உதவித் தொகையை இரண்டு மடங்கு அதிகமாக்கியது. உலகம் அதைக் கண்டு பெருமை பட்டது.

அதே இரு மடங்கு உதவித் தொகையை, பிரெஞ்சு அரசு லூயி பாஸ்டியர் மறைவுக்குப் பிறகும் கூட அவரது துணைவியாரான ஜீன் எடினட் ரோக்யீக்கும் - அவரது மக்களுக்கும் வழங்கிட உத்தரவிட்டது.

வெறி நாய் கடிக்கு : வெறி நாய் —
மூளையே மருந்து லூயி கண்டுபிடிப்பு!

நல்ல பாம்பு கடித்தால் மனிதன் இறந்து விடுகிறான்! காரணம், அதனிடம் உள்ள நஞ்சுதான்! அதனால்தான், பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பு கடித்த மனிதனுக்கு சாவு நிச்சயம் என்ற நம்பிக்கை மனித