பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மருத்துவ விஞ்ஞானிகள்



ஜோசப் என்ற ஒரு சிறுவனை வெறி நாய் கடித்து விட்டது. ஒன்றிரண்டு இடத்தில் அல்ல; பதினான்கு இடத்தில் கடித்து விட்டது. கடி என்றால் ஏதோ சாதாரண கடிகளல்ல; பலமான கடிகள். வழக்கம் போல் வெறிநாய்க் கடிக்குப் போடும் இரும்பு சூட்டைப் போட்டால் அந்தச் சிறுவன் தாங்க மாட்டான் இறந்து போவான் என்று அவனது பெற்றோர்கள் எண்ணியதால், அங்கே இருந்த மக்களில் சிலர் பையனை லூயி பாஸ்டியரிடம் அழைத்துப் போகுமாறு வற்புறுத்தினார்கள்.

சிறுவனுடைய தாயார் அவனை அழைத்துக் கொண்டு பாரிஸ் நகருக்கு வந்தாள். பையனுடைய நாய்க்கடி விவரத்தைக் கூறி, எப்படியாவது எனது மகனைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தத் தாய் அழுது அரற்றினாள் லூயியிடம்!

டாக்டர் பாஸ்டியர் சிறுவனது நாய்க் கடிகளை எல்லாம் பார்த்தார் பையனுக்கோ ஒரே வலி கதறல்! அலறல்! தாயோ தனது பிள்ளையின் வலி வேதனைகளைக் கண்டு அந்த அம்மையாரும் கோவென அழுது புலம்பும் பரிதாப நிலை. இவை அனைத்தையும் லூயி பார்த்துப் பரிதாபப் பட்டார்.

லூயி பாஸ்டியருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. என்ன சிந்தனை அது?

வைத்தியம் செய்தாலும் சிறுவன் பிழைக்க மாட்டான். கடிகளோ பதினான்கு இடங்களில் பதிந்துள்ளன. மருத்துவம் செய்யா விட்டாலோ அவன் நிச்சயமாக பிழைக்க மாட்டான்.

நம்மிடம் ஏற்கனவே தயாராக உள்ள வெறிநாய் மூளையின் பொடி மருந்தை நாம் ஏன் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது? என்று எண்ணிய லூயி பாஸ்டியர், என்ன ஆனாலும் சரி, நமது மருந்தைப் பயன்படுத்தித்தான் பார்போமே! என்ற முடிவுக்கு வந்தார். வெறிநாய் மூளை மருந்தை அந்தப் பையன் உடலுக்குள்ளே ஊசி மூலமாகச் செலுத்தினார்.

சில நாட்கள் தொடர்ந்த அந்த சிகிச்சைக் காலத்துக் குள்ளேயே, அந்தப் பையன் ஓடி விளையாட ஆரம்பித்தான். உணவை வேளா வேளைக்கு உண்டான். நிம்மதியாக