பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

173



அவற்றுடன் போராடி வெற்றிகளைக் கண்டு, மற்ற உயிர்களை மீட்பதிலே மகிழ்ச்சி பெற்றார் லூயி பாஸ்டியர்! அதனால்தான் உலகம் இன்றும் அந்த மா மேதையைப் போற்றி வாழ்த்துகின்றதைப் பார்க்கின்றோம்.

நோய்கள் எந்த உருவத்தில் வந்தாலும், அவற்றை அழிப்பதற்கான முயற்சி உலகில் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது உள்ளாசையாகும். அதற்காக லூயி பாஸ்டியர் ஒரு பெரிய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்த மனித நேய ஆசையை உலக மக்கள் உணர்ந்தார்கள். அவருடைய அந்த அவாவை நிறைவேற்றிட மக்கள் தாராள மாக நன்கொடைகளை வழங்கி உதவினார்கள். ஃபிரான்ஸ் நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலக நாடுகளிலே இருந்தெல்லாம் பணம் நன்கொடைகளாக வந்து குவிந்தன.

அந்த நன்கொடைகள்தான், இன்றும் பாரிஸ் நகரில், பாஸ்டியர் நிலையம் என்ற பெயரில் கம்பீரமான ஆராய்ச்சி நிலையமாக நின்று புகழ் பூத்து வருகின்றது.

அந்த பாஸ்டியர் நிலையம் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை, பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்துப் பாராட்டி நன்றி கூறினார்.

அந்த விழாவிலே இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்து பாஸ்டியர் சாதனைகளுக்குப் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள். அந்த பாஸ்டியர் நிலையம் இன்றும் கூட நோய் ஒழிப்பு பணிகளைச் செய்து கொண்டே வருகின்றது.

ஃபிரான்ஸ் நாட்டிலே மட்டுமன்று; உலக நாடுகளிலே எல்லாம் பாஸ்டியர் பெயரால், பாஸ்டியர் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டைபாயிடு, காலார, பிளேக் போன்ற மக்கட் கொல்லி நோய்களை, அந்த நிலையங்கள் அழித்து ஒழித்து விட்டன. அதற்கெலாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? பாஸ்டியர்