பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

175


முன்னேறும். எதிர்காலத்தில் உங்களது மனம் திருப்தி அடையும் என்றெல்லாம் அறிவியல் துறை பயிற்சி டாக்டர்களுக்கெல்லாம் அடிக்கடி அறிவுரை வழங்கிக் கொண்டே வந்தார்.

லூயி பாஸ்டியர் ஒர் அறிவியல் அறிஞராக மட்டுமே வாழவில்லை. சிறந்த ஒரு நாட்டுப் பற்றாளராகவும் வாழ்ந்தார். தான் பிறந்த நாட்டின் மானத்தைக் காத்திட, தனது எதிரி நாடுகள் வழங்கிய அறிவுப் பரிசுகளை, பட்டங்களை, பதவிகளை எல்லாம் அந்த நாடுகளது முகத்திலேயே துக்கி எறிந்தார் லூயி பாஸ்டியர்!

மனித நோய்களை மண்மூடச் செய்யும் அழிவுச் சக்திகளை லூயி பாஸ்டியர் வெறுத்தார். குறிப்பாக, ஒரு நாட்டை எதிர்த்து இன்னொரு நாடு, போர்க் கருவிகளைப் பெருக்கிட, அறிவியலைப் பயன்படுத்துவது அறிவீனம் என்று அறிவித்தார் லூயி, எப்போதும் அவர் உலக அமைதியையே விரும்பினார்.

இத்தகைய நேரத்தில், லூயி பாஸ்டியருடைய உடல் நலம் நாளுக்கு நாள் வளமிழந்து வந்ததால், எதையும் சிந்தித்துச் செயலாற்றிடும் மனநிலை உள்ள போதே லூயி பாஸ்டியர் என்ற அறிவியல் ஞானி திடீரென உயிர் நீத்தார்! அப்போது அவருக்கு வயது எழுபத்திரண்டாகும்.

மாவீரன் நெப்போலியன், பிரான்ஸ் நாட்டின் பெயரைத் தனது வீரத்தால் புகழடையச் செய்தார்.

அவருக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டிலேயே, நெப்போலியனையும் சேர்த்து, மிகச் சிறந்தவர் யார் என்ற மக்கள் வாக்கெடுப்பு நடந்ததது.

அந்த நாட்டு மக்கள் லூயி பாஸ்டியர் மிகச் சிறந்தவர் என்று முடிவு கூறினார்கள்.

ஃபிரான்ஸ் நாட்டின் முன்னேற்றத்தில், அதன் வளர்ச்சியில், அரசியல், பொருளாதாரம், சமுதாய மறுமலர்ச்சி. ராஜதந்திரம், சாம்ராச்சிய நிறுவல், மதத் தொண்டுகள், மனித