பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மருத்துவ விஞ்ஞானிகள்


அந்த ரத்தம் திரும்ப வந்து சேரும் முறையைப் பற்றி அன்று வில்லியம் ஹார்வி தெரிவித்தக் கருத்துக்கள், இன்றை மருத்துவ உலகத்திற்கும் பயன்படுவதாக இருப்பதை மருத்துவ உலகம் புரிந்து கொண்டு விட்டது.

ஹார்வியின் : இளமைப் பருவம்!

மருத்துவத் துறைக்கு இதயம் பற்றி அவர் செய்த ஆராய்ச்சியும், சத்தம் ஒட்டம் குறித்து அவர் வெளியிட்ட சிந்தனைகளும் உலகத்தாரால் போற்றப்பட்டன.

அந்த மருத்துவ விஞ்ஞான மேதை, 1578-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள போல்க்ஸ்டன் கெஸ்ட் என்ற நகரில் பிறந்தார். இவருடைய தந்தை போக்ஸ்டன் நகரின் மேயராக இருந்தார். அவருக்கு ஹார்வி முதல் மகன். ஹார்வியுடன் பிறந்தவர்கள் ஏழு பேர்கள் ஆவர்.

வில்லியம் ஹார்வியின் தந்தையான தாமஸ் ஹார்வி, முற்போக்கு சிந்தனைகள் உடையவர். அவர் நகர மேயராகப் பணியாற்றிய வராதலால், அந்த நகரில் அவர் செல்வாக்கும், சொல்வாக்கும் உடையவர். பணவசதி படைத்தவர்; அதனால், தமது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்த சிறந்தக் கல்விமானாகவும் விளங்கினார்.

வில்லியம் ஹார்வியின் உடன் பிறப்புகள் நல்ல கல்வி யாளராக மட்டுமல்லாமல், செல்வச் சீமான்களாகவும் விளங்கி னார்கள்.

இவரது தம்பிகளில் ஐவர் வணிகப் பெருமக்களாகவும், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், புகழோடு வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்களில் புகழ்பெற்றவர்தான் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி.

காண்டர்ஸ்பரி என்ற புகழ் பெற்றக்கிராமத்தில் வில்லியம் ஹார்வி தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கியவர். பிறகு