பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மருத்துவ விஞ்ஞானிகள்


ஆசானையே மிஞ்சுமளவுக்கு ஆய்வு மேதையாக ஹார்வி திகழ்ந்ததை எண்ணி பெப்ரிசியசே வியப்படைந்தார்.

பெப்ரீசியஸ் தனது மாணவரான வில்லியம் ஹார்வியை மனம் திறந்து பாராட்டி, அத் துறையில் அவரது ஆக்கத்தின் நோக்கத்திற்கு ஊக்கமளித்து வாழ்த்தினார். புகழ்பெற்ற தத்துவஞானி பிரான்சிஸ் பேகன் ஹார்வியின் நண்பர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வில்லியம் ஹார்வி, இத்தாலியில் உள்ள ஆங்கில மருத்துவ மாணவர் மன்றத்திற்குச் செயலாளர் ஆனார்! மற்ற மாணவர்களுக்கும் அவர் மருத்துவ நுட்பங்களை விளக்கப் பயிற்சி கொடுக்கும் விஞ்ஞான வித்தகராகவும் விளங்கினார்.

மருத்துவத் துறையின் பட்டத்தை வில்லியம் ஹார்வி 1602ம் ஆண்டு பெற்றதும், இங்கிலாந்து திரும்பி தனது சொந்த ஊருக்கு வந்து தனது ஆராய்ச்சியை அங்கு தொடர்ந்தார். மருத்துவராகப் பணிபுரிந்த நேரத்தில் அவரது தந்தையார் - ஹார்விக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், கடைசி வரை அவர் மக்கட்பேறு இல்லாமலே மறைந்தார்.

இரண்டு மன்னர்கள் : நண்பராயினர்

மருத்துவத் துறை டாக்டராகப் பணிபுரிந்த ஹார்வி தலைசிறந்த மருத்துவர்களிலே ஒருவர் என்ற புகழை போர்ஸ்டோன் நகரிலே பெற்றார்.

இல்லற வாழ்க்கையை அவர் செம்மையாக நடத்தி வந்தபோது, இராயல் கல்லூரியின் மருத்துவ ஆலோசகராகத் தேர்வு செய்யப்பட்டார். 1609-ஆம் ஆண்டில் வில்லியம் ஹார்வி செயிண்ட் பஸ்தலோமி யூஸ் மருத்துவமனையில் மருத்துவரானார்.

இந்தப் பதவி புகழ்பெற்ற மருத்துவ மேதைகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஹார்விக்கு அந்த பதவி கிடைத்தது அவரது மருத்துவத் திறமைக்கே ஆகும். இந்தப் பதவியில்