புலவர் என்.வி. கலைமணி
25
ஹார்வி நியமனம் செய்யப்பட்டதற்குப் பிறகுதான், இங்கிலாந்து மருத்துவ உலகத்தில் அவருடைய அறிவுக்கு உத்திரவாதம், அங்கீகாரம் கிடைத்தது எனலாம். முதலாம் சார்லஸ், முதலாம் ஜேம்ஸ் என்ற இங்கிலாந்து மன்னர்கள் நண்பர்கள் மட்டுமல்லர்; ஹார்வியின் நோயாளிகளும் கூட!
இந்தப் பதவியை அவர் பெற்ற பின்புதான், மக்களுக்கு ஏதாவது புதுமையான மருத்துவக் கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து, மக்கட்சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைகளே வில்லியம் ஹார்விக்கு எழு ஞாயிறுபோல ஒளி பெற ஆரம்பித்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக அந்தப் பதவியிலே நீடித்தார். அதனால் இங்கிலாந்து நாட்டு மன்னர்கள் நட்பு அவரைத் தேடி வந்து கிடைத்தது. காரணம், அந்த மருத்துவமனையின் பதவிகள் மன்னரால் நியமிக்கப்படும் பதவிகள் ஆகும்.
மதிப்பும் மரியாதையும் அந்தப் பதவிக்கு அதிகமாக இருந்ததே தவிர, அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டொன்றுக்கு நாற்பதே டாலர்தான். செல்வாக்குள்ள குடும்பம் என்பதால், அவரால் அந்தப் பதவியில் முப்பது ஆண்டுக் காலம் நீடிக்க முடிந்தது.
இந்தக் குறைவான ஊதியம் பெற்றவரது குடும்பம் எப்படி இருந்திருக்கும்? வாரம் இரு முறை மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பாடம் போதிக்க வேண்டும். வாரம் ஒரு முறை மனித உடலை அறுவை செய்து காட்டிப் பாடம் எடுக்க வேண்டும். இருந்தும், ஊழியப் பற்றாக்குறை குறித்துக் கவலைப்படாமல், அவற்றை ஒழுங்காக அவர் செய்து வந்ததுடன், தனது ஆராய்ச்சி நுட்பங்களையும் தனக்குத் தானே வளர்த்துக் கொண்டார் வில்லியம் ஹார்வி.
ஹார்வி எழுதிய ஆய்வு நூல்கள்!
செயிண்ட் பஸ்தலோமியூஸ் மருத்துவமனையில் ஹார்வி மருத்துவ உடற் கூறு விரிவுரையாளராக இருந்தபோது, அவர்