பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

33ஹார்வி ஆராய்ச்சி செய்த நேரத்தில், நுட்பமாக எதையும் நோக்கும் பூதக்கண்ணாடி என்ற கருவி இல்லை. இருந்திருந்தால் அந்த ரகசியச் சிக்கலையும் ஹார்வி அப்போதே கண்டு பிடித்திருப்பார்!

சிறிய சிறிய தமனிகள், மேலும் சிறிய தந்துகிகளாகப் பிரிந்து, அயோர்டாவில் உள்ள சுத்த ரத்தத்தை எடுத்துக் கொண்டு போய், உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்குகிறது.

இந்த தந்துகிகள் வெறுங்கண் பார்வையால் பார்க்க முடியாத அளவுக்கு மெல்லியதாக இருக்கும். இந்தச் சிறிய ரத்தக் குழாய்கள் மற்ற உறுப்புகளில் உள்ள அழுக்குப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிரைக்கு அனுப்ப, சிரை அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு அனுப்புகிறது. வலது ஆர்ட்டிக்கிகளுக்கு வந்த அந்த கெட்ட ரத்தம் வலது வெண்டிக்குகளுக்கு அனுப்பப் படுகின்றது.

வலது வெண்டிக்களுக்கு வந்த அந்தக் கெட்ட ரத்தம், நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குச் சென்று, நுரையீரல் உள்ள ரத்தம் தந்துகிகளில் சென்று சுவாசித்த பிராண வாயு வினால் சுத்தமடைந்து, திரும்பவும் நுரையீரல் சிரை வழியாக இதயத்திலுள்ள இடது ஆர்ட்டிக்குகளுக்கு வருகிறது. அதனால் தான் ஹார்வி ரத்தம் சுழற்சியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது எனறார்.

ஹார்வியை ஓட ஓட விரட்டினர்!

இதயத்தைப் பற்றி இவ்வளவு ஆழமான, தெளிவான, அரியதான் உண்மைகளைக் கண்டு ஆராய்ந்த வில்லியம் ஹார்வியைப் பாராட்ட மனமில்லாவிட்டாலும், அவரை அவமானப்படுத்தாமலாவது, கேலிக் கிண்டல்களை அவரது அறிவு மீது எய்யாமலாவது இந்த அறியாமை உலகம் இருந்திருக்கலாம் அல்லவா?

ஆனால், அன்றைய மருத்துவ உலகம் அவரை என்ன செய்து தெரியுமா? அவரை ஓட ஓட விரட்டியது; அதுமட்டு