பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

35அப்போதுதான், வில்லியம் ஹார்வியின் அறிவை எல்லாரும் மதிக்கத் தலைப் பட்டார்கள். மக்களிடம் ஹார்விக்குச் செல்வாக்கும் ஓங்கியது. மருத்துவ உலகமும் அவரை வானளாவப் போற்றி வாழ்த்தியது.

மருத்துவ உலகில் ஹார்விக்கு இருந்த எதிர்ப்பும் குறைந்தது - அவர் போகும் இடங்களிலே எல்லாம் மக்கள் வில்லியம் ஹார்விக்குப் பாராட்டுக் கூட்டங்களை நடத்திவரவேற்பையும்; வாழ்த்துக்களையும் வழங்கிக் கொண்டே இருந்தார்கள்

மன்னர் சார்லஸ் செய்த இந்த செயற்கரிய உதவிகளை வில்லியம் ஹார்வி தான் சாகும்வரை மறக்காமலேயே நன்றி பாராட்டினார்.

எந்த ஹார்வியை அரைப் பைத்தியம், கிறுக்கன் என்று மருத்துவ உலகம் அவமதித்ததோ அதே மருத்துவ உலகம் வில்லியம் ஹார்வியின் வார்த்தைகளைத் தேவ வாக்குகளாக மதித்துப் போற்றியது. சார்லஸ் மன்னனும் ஹார்வியின் வாக்குகளை மதித்து நடந்தான்.

‘இங்கிலாந்து நாட்டுக்கு மட்டும்தான் நான் மன்னன். ஆனால், வில்லியம் ஹார்வி மருத்துவ உலகிற்கும், மக்கள் அபிமானத்துக்கும் மன்னன்’ என்று வாயார வாழ்த்தினார் மன்னர் சார்லஸ்.