பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

41


ஆயினும்; அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது தானே அறிவு? அதற்கேற்றபடி நூலாசிரியர் கருத்து முழுவதையும் லிஸ்டர் அப்படியே ஏற்க மாட்டார்.

படிக்கும் நூலை அவரது அறிவு நிர்வாணமாக்கி, அச்சு வேறு - ஆணி வேறாகப் பகுத்துப் பிரித்து ஆய்வுச் செய்த பின்பு, நல்லவைகளை ஏற்பார்; அல்லவைகளை அகற்றிடுவார் லிஸ்டர். இது அருமையான பண்பாக அவரிடம் அமைந்திருந்தது.

கல்லூரி கடைசி ஆண்டுத் தேர்வில் லிஸ்டர் நோயாளி ஆனார்! இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்து தேர்விலும் வெற்றி பெற்று 1848-ஆம் ஆண்டில் மருத்துவத் துறை பட்டம் பெற்றார். படித்த அதே கல்லூரியில் 1850-ஆம் ஆண்டில் மருத்துவர் ஆனார்:

பணி புரிந்து வந்த கல்லூரியில் லிஸ்டருடைய ஆராய்ச்சிக் கேற்றவாறு எல்லா வசதிகளும் அமைந்திருந்தது. அந்த வசதிகளோடு ஆய்வு செய்ய அறிவாளிகள் பலர் அங்கே அமர்ந்து ஆராய்ந்தார்கள்.

அவர்களுடைய பழக்க வழக்கம், நட்பு லிஸ்டருக்கும் வாய்த்தது. அதனால் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்ட சந்தேகங்களைக் கலந்துரையாடி நீக்கிக் கொள்ளும் சமயமும் உருவான.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு, எண்ணற்ற உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி என்பதிலேயே ஊன்றிக் கண்டறிந்து வந்த லிஸ்டரின் அறிவையும், ஆராய்ச்சியின் பயன்களையும் புரிந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் 1852-ஆம் ஆண்டில் Fellow of Royal College of Surgen's Association என்ற சங்கத்தில் லிஸ்டரை வலிய உறுப்பினராக்கிக் கொண்டு அவரைப் பெருமைப் படுத்தியது.

இந்தப் பெருமையை ஏற்றுக் கொண்ட பின்பு ஜோசப் லிஸ்டர், எடின்பர்க் சென்று தனது மேல் படிப்பைத் துவக்கினார். ஏழாண்டுகள் அதே கல்லூரியில் தொடர்ந்து கல்வி கற்று வந்த