பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

உலக மருத்துவத் துறையில், புதுப் புது புதுமைகளை, அறிவியல் அற்புதங்களை, விஞ்ஞான விந்தைகளைக் கண்டுபிடித்து உலகுக்கு மருத்துவக் கொடைகளாகக் கொடுத்து உதவிய மருத்துவ மேதைகள் எண்ணற்றவர்கள் ஆவர்.

அந்த வித்தகர்களைப் பற்றிய வரலாறுகள், மருத்துவ முறைகள், மருந்துகள், அவற்றின் பயன்பாடுகள் ஒரு சில தான் தமிழில் வெளி வந்திருக்கின்றன.

“மருத்துவ விஞ்ஞானிகள்” என்ற இந்த நூலில், இதயம் என்றால் என்ன? அதன் இயக்கம் எப்படி இயங்குகின்றது? என்பதை விளக்கமாக விவரித்தவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி. அதனால் அந்த அற்புத அறிஞரை, “இதயத்தின் தந்தை” Father of Cardiology என்று மருத்துவ உலகம் இன்றும் அவரைப் போற்றிப் புகழ்பாடி வருகின்றது. அவரது முழு வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

“ஆண்டி செப்டிக் சர்ஜரி என்ற நச்சுத் தடை அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோசப் லிஸ்டரின் புதிய அறுவை சிகிச்சை முறையும் - அதற்கான மருத்துவமும், இந்த நூலில் அடங்கியுள்ளது.

மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பழைய மருத்துவத் துறையின் ஆபத்துக்களை அகற்றி, காலத்துக்கேற்ற புதிய மருத்துவ முறைகளை முதன்முதலில் புகுத்தி வெற்றிகண்ட புதிய மருத்துவ துறை மறுமலர்ச்சியாளரான டாக்டர் சர்.வில்லியம் ஆஸ்லரின் மருத்துவ வித்தக வரலாறும் இந்த நூலில் அமைந்துள்ளது. ‘அநோபில்ஸ்’ என்ற கொசு வகையைக் கண்டு, அதனை அறுவை சிகிச்சை செய்து, அதனால் உண்டாகும் மலேரியா