பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மருத்துவ விஞ்ஞானிகள்


அதனதன் மருந்து முறைகளும், நோய்த் தடுப்பு நுட்பங்களும் ஆஸ்லருக்கு ஏராளமாகக் கை வந்துவிட்டதன் அனுபவப் பலன்களால் 1872-ஆம் ஆண்டில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார்!

குறும்பன் இராபர்ட் கிளைவ்!

இலண்டன் நகரத்தில் - குறும்புக்காரன், காலித்தனம் செய்பவன், கடைவீதி வணிகர்களிடம் எப்பேதும் மல்லுக் கட்டிக் கொண்டு, சண்டையும் - சச்சரவும் போட்டுக் கொண்டே தகராறுகளைச் செய்பவன்; வீதிகளிலுள்ள சாக்கடைச் சேறுகளை வருவோர் போவோர் மேல் வாரி வீசி வம்பு செய்பவன் என்றெல்லாம் பெயர் எடுத்தவன் இராபர்ட் கிளைவ் என்ற போக்கிரிக் குறும்பன்.

அவன் வாலிபன் ஆனான்; கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற வணிக நிறுவன ராணுவப் படைகள் தளபதியானான்! அவனை அந்த நிறுவனம் இந்திய நிறுவனத்துக்கு அனுப்பியது. தமிழ்நாடு வந்தான் - பிரிட்டிஷாரின் கிழக்கு இந்தியக் கம்பெனியின் தளபதிகளுள் ஒருவனாக, அவன் கீழ் ஓர் இராணுவப் படை பலமும் இருந்தது.

சாக்கடைச் சேற்றை இலண்டன் வீதியின் சாக்கடைகளிலே இருந்து வாரிவாரி வீசிய அந்தக் குறும்புக்காரன்தான், போக்கிரிதான்; முரடன்தான்; மூர்க்கன்தான்; இந்தியாவிலே பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை உருவாக்கிட கால்கோள் விழா நடத்திக் கோட்டைக் கொத்தளங்களைச் சென்னை நகரில் உருவாக்கி, பிரெஞ்சு, டேனிஷ், போர்ச்சுகல் படைகள எல்லாம் விரட்டி விரட்டி அடித்து, சூரியன் மறையாத ஆங்கிலேயேர் சாம்ராச்சியத்துக்கு அடிப்படையிட்ட மாவீரனானான் - இராபர்ட் கிளைவ், பிரிட்டிஷ் வரலாறு இன்றும் அவனை வாழ்த்திக் கொண்டிருக்கின்றதைச் சரித்திரத்தில் படிக்கின்றோம்.

அந்த மாவீரன் இராபர்ட் கிளைவ் போலவே, இந்த ஆஸ்லரும் இளம் வயதிலே முரடனாக, மூர்க்கனாக, குறும்பனாக,