பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மருத்துவ விஞ்ஞானிகள்



ஆஸ்லரின் மருத்துவ விஞ்ஞானப் புதுமைக் கண்டு பிடிப்புக்களுக்குப் பெருமை செய்வதின் அடையாளமாக, வில்லியம் ஆஸ்லரை நிறுவனத்தின் உறுப்பினராக 1892-ஆம் ஆண்டு பதிவு செய்து பாராட்டி மகிழ்ந்தது. அதனால் அவரது புகழ், மேதினியளவில் மேலும் மேன்மையானது.

மிக்கிங் பல்கலைக் கழகத்திலே இருந்த தனது விரிவுரையாளர் பதவியை ஆஸ்லர் 1894-ஆம் ஆண்டில் துறந்தார். பிலடெல்பியாவில் பென்சில்வேனியா என்ற பல்கலைக் கழகம் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்று.

அதில் பேராசிரியர் பதவி பெற்றிட ஆஸ்லர் பிலடெல்பியா சென்றார். பேராசிரியர் பதவியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானத்துக்காக அரும்பாடு பட்டார். அங்கே ஆராய்ச்சியிலே அயராது உழைத்தார்.

தொழிலின் சிறப்புகள்

வில்லியம் ஆஸ்லர் கண்டுபிடித்த புதுமைகளாலும், மருத்துவ விஞ்ஞானத்தில் அவர் புதிய முறைகளோடு சிகிச்சைகளைச் செய்து வந்ததாலும், சிறிதளவே மருந்தளித்து, நோயை விரைவாகக் குணப்படுத்தும் மருத்துவத் திறமையாலும், ஒரு தரம் ஒருவனுக்கு வந்த நோய் மறுமுறை வராமல் தடுக்கப்படும் மருத்துவ உயர்நிலை சிகிச்சை முறைகளாலும், மலேரியா, டைபாய்டு, இதய நோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கியதாலும், நோய்களைத் தடுப்பதற்குரிய மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் கண்டுபிடித்தக் காரணத்தாலும், அவர் வகித்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பதவி மூலமாகச் செய்திட்ட மக்களுக்குரிய மருத்துவத் தொண்டுகளாலும், மருத்துவத் துறையில் வில்லியம் ஆஸ்லர் தமக்கனெ ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் புதியதோர் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் என்று பெயர். அதில் மருத்துவப் பணி புரிய