பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

77


உலகத்தில் புகழ் பெற்ற மருத்துவ பேராசிரியர்கள் தேவைப் பட்டார்கள்.

பால்டிமோர் என்ற இடத்திலே தோற்றுவிக்கப்பட்ட அந்த பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு வில்லியம் ஆஸ்லர்தான் தகுதியானவர் என்று அந்த நிர்வாகம் நினைத்ததால் அவரையே நியமித்தது. பல்கலைக் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்த ஆஸ்லர், எல்லாவித வசதிகளையும் கொண்டதோர் மருத்துவ மனையினைப் பல்கலைக் கழகம் அருகிலேயே கட்டி முடித்து மக்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தார்.

அன்றுவரை அவர் ஆராய்ச்சி செய்த கருத்துக்களை, அந்தப் பல்கலைக் கழக மருத்துவ மாணவர்கள் கற்கும் வகையில் நூற்களாக வெளியிட்டார். அந்த நூல்கள் அவரது அருமை பெருமைகளை இன்றும் உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.

பல துறைகளில் அந்தப் பல்கலைக் கழகம் உயர, ஆஸ்லர் இரவும் - பகலுமாக உழைத்து வந்ததுடன் நில்லாமல், தனித்த முறையில் நோயாளிகளுக்குரிய சிகிச்சைகளையும் செய்து வந்தார். சுருக்கமாகக் கூறுவதானால், ஆஸ்லர் ஒரு தேனீ போலத் தனது மருத்துவப் பணிகளை ஆற்றினார்.

தன்னலம் கருதாத இவரது உழைப்பையும், மனப்பான்மை யும், பணியாற்றும் ஆர்வமும் மற்ற மருத்துவர்களுக்கு ஒரு பொதுப் பாடமாகத் திகழ்ந்து வந்தது.

பதினாறு ஆண்டுகளாக அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சிக்காக ஆஸ்லர் அரும்பாடு பட்டதால், அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்தப் பல்கலைக் கழகத்தை உலகில் உயர்ந்த பல்கலைக் கழகமாக உயர்த்திக் காட்டி விட்டார்.

பால்டிமோர் பல்கலைக் கழகத்தைச் சிறப்பாக முன்னேற்றி காட்டிவிட்டப் பிறகு, அங்கே இருந்து புறப்பட்டு ஆக்ஸ்ஃபோர்டு வந்து சேர்ந்தார். பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், நிர்வாகமும், கல்வி கற்கும் மாணவர்களும் வில்லியம் ஆஸ்லரைக் கண் கலங்கிப் பிரியா விடை கொடுத்து அனுப்பி