பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மருத்துவ விஞ்ஞானிகள்


வைத்த காட்சிகள். அவரது உழைப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்தன.

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்கு வில்லியம் ஆஸ்லர் வந்தபோது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடைய முடி சூட்டு விழா நடைபெற்றது.

அந்த விழாவின்போது வில்லியம் ஆஸ்லருக்கு, இங்கிலாந்து பிரபுக்களுக்கு வழங்கப்படும் ‘பாரனெட்’ என்ற விருதை ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்தார்.

1914-ஆம் ஆண்டில் உலகப் பெரும் போர் ஆரம்ப மானதால், திருமதி ஆஸ்லரும் தனது கணவனுடன் சேர்ந்து போர்க் கால மருத்துவப் பணிகளை இருவரும் செய்து வந்தார்கள்.

அப்போது வில்லியம் ஆஸ்லருடைய 70-வது பிறந்த நாள் விழாவை இங்கிலாந்து அரசு கொண்டாடி மகிழ்வித்தது. அன்றை பத்திரிக்கைகள் ஆஸ்லர் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் பாராட்டின.

சர். வில்லியம் ஆஸ்லர் மறைந்தார்!

ஆஸ்லர் பிறந்த நாள் விழா நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மருத்துவ விஞ்ஞான மேதை சர். வில்லியம் ஆஸ்லர் கி.பி. 1919-ஆம் ஆண்டில் எதிர்பாராமல் திடீரெனக் காலமானார். உலகமே துக்கத்தில் மூழ்கியது.

சாதாரண ஒரு குடும்பத்திலே பிறந்து, வளர்ந்து, குறும்பராக, வம்பராக, அரட்டை அடிக்கும் மாணவராக விளங்கிய வில்லியம் ஆஸ்லர், உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி என்ற சிகரத்தை அடைந்து - ஈடில்லாத மருத்துவ மன்னர் என்ற புகழைப் பெற்று மறைந்தார். அந்த மருத்துவ ஞானியின் உழைப்பு நமக்கெல்லாம் ஒரு பாடம் அல்லவா?

வில்லியம் ஆஸ்லரின் மருத்துவ சேவைகளை உலக மருத்துவர்களால் இன்றும் புகழப்படும் அளவிற்கு நிலைத்து