பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




வில்லியம் ஹார்வி
(1578 1657)



1
பயந்தவன் தனக்கே பகையானான்!
துணிந்தவன் உலகுக்கு ஒளியானான்!

மனிதன் என்று தோன்றினானோ, அன்று முதல் அவன் இயற்கைச் சக்திகளோடு இன்று வரைப் போராடிக் கொண்டே இருக்கின்றான்!

மனிதகுலப் போராட்டம் - ஏன்?

விண்ணை எதிர்த்துப் போராடினான் - வானவூர்தியைக் கண்டு பிடித்தான். மண்ணை எதிர்த்துப் போராடினான் - அணுவை நூறு கூறுகளாக்கி அதற்குக் கோண் என்ற ஒரு புதுமைப் பெயரையிட்டான்! அணு குண்டைக் கண்டு பிடித்தான்; அவனியை இன்று அதட்டிப் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான்!

தண்ணிரை எதிர்த்தான்; மீனையே கடலை விட்டுத் தூக்கி எறிந்து, அதையே உணவாக்கிக் கொண்டு, கடல் தண்ணீரையே