பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மருத்துவ விஞ்ஞானிகள்


உணவின் மூலமாகத்தான் மலேரியா நோய் உண்டா கின்றதை ரோஸ், முதலில் ஒப்புக் கொண்டார். என்றாலும், முழுமையாக அதேதான் சரியான காரணம் என்பதை அவர் நம்ப மறுத்தார். எனவே, மலேரியா நோய் வருவதற்கு எது முழு முதல் காரணமாக இருக்கும் என்ற சிந்தனையிலே ரோஸ் மீண்டும் உழன்று கொண்டே இருந்தார்.

மலேரியா நோய் கண்ட சிலரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார் ரோஸ். அப்படியும் அவருக்கு அதன் முழுக் காரணமும் நம்பும்படிப் புலப்படவில்லை.

கொசுதான் காரணம் என்பதோடு மட்டும் ரோஸ் இராமல், மலேரியா நோய் கண்ட ஒருவனது உடலைக் கடித்தக் கொசுவைப் பிடித்து, அதை உருப்பெருக்கிக் கண்ணாடிக் கருவி மூலமாக ஆராய்ந்தார்.

அப்போதுதான், மலேரியா நோய்க் கிருமிகள் கொசுவின் வயிற்றில் இருப்பதை அந்த டெலஸ்கோப் கண்ணாடி மூலம் உணர்ந்தார். ஆனால், ரோஸ் இந்த நோய்க் கிருமிகள் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்க்கு, நோய் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது என்ற மர்மம் அவருக்குப் புரியாமலே இருந்தது.

இந்த உண்மையை உணர்வதற்காக ரோஸ் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக பல வகையான கொசுக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். கஷ்டத்தின்மேல் கஷ்டங்களைக் கண்டார் அவர்.

இந்தியாவிலே உள்ள ‘பேகம்பேட்’ என்னும் ஆராய்ச்சிச் சாலைக்குச் சென்று நீண்ட நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்தார் ரோஸ்!

கொசுக்கள் : கண்காட்சிகள்!

அந்த ஆராய்ச்சிச் சாலையில் பல வகையான கொசுக்கள் பறப்பதைக் கண்டு ரோஸ் மகிழ்வார். கொசுக்கள் அதன் இடத்தை விட்டு வெளியே பறந்து போய் விடுமோ என்று பயந்த ரோஸ்,