உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

93


தனது தலைக்கு மேலே ஒடும் மின் விசிறி போன்ற பங்காக்களையும் நிறுத்தி விட்டார். கோடை காலம்தான் என்றாலும், வெயில் வெப்பத்தைக் தாங்கிக் கொண்டே அவர் ஆராய்ச்சி செய்தார்.

கொட்டும் வியர்வை அவரது உடலை நனைப்பதைக் கூட அவர் பொருட்படுத்தாமல், மெய் மறந்து கொசுவகைகளைக் கண்டறிந்தார். எவ்வளவு நேரம் ஈடுபட முடியுமோ அவ்வளவு நேரமும் வெயிலையும் அவர் கவனியாமலே வேலையில் ஈடுபட்டிருந்தார்.

பங்காவைப் ஓட்டலாம் என்றால், பணியாட்களுக்குப் பயம்! ரோஸ்தானே கொசுக்கள் ஓடிவிடப் போகிறது என்று பங்காவை நிறுத்தச்-சொன்னவர்! அதனால், பணியாட்களும் வெயிலால் வேதனைப் பட்டார்கள். பாவம்! இந்த நேரத்தில் நுண் பெருக்கிக் கண்ணாடிமேல் ரோஸ் நெற்றியின் வியர்வைத் துளிகள் சிதறிச் சிந்திக் கொண்டே இருந்தன. இவ்வாறு வியர்வைத் துளிகள் பல நாட்கள் விழுந்ததால், நுண்பெருக்கிக் கருவி துருப்பிடித்து விட்டது. அதனால், அவை தெரித்து உடைந்து விட்டன. இந்தச் சிரமங்களை எல்லாம் ரோஸ் பொருட்படுத்தவில்லை. எல்லா இடுக்கண்களையும் அவர் பொறுத்துக் கொண்டார் கருமமே கண்ணாக இருந்தார்.

அநோபில்ஸ் என்றால் என்ன?

ஒரு நாள் காலை, ரோஸ் ஆராய்ச்சி சாலையில், ஏதோ சிந்துத்துக் கொண்டே இருக்கும் போது, கொசுக்கள் பாடும் ராகங்களும், அவை பறக்கின்ற அழகுக் காட்சிகளையும் அவரது கண்கள் ரசித்துக் கொண்டே இருந்தன.

அப்போது ஒரு புதுமையான கொசு ஒன்று பறந்து வந்து அங்கே இருந்த சுவரில் அமர்ந்திருந்தது. அதை ரோஸ் கண்டு, அருகே சென்று பிடித்துவிட்டார். ஆராய்ச்சி செய்தார். அதைப்போல நூற்றுக் கணக்கான கொசுக்களைப் பிடித்துப்