பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மருத்துவ விஞ்ஞானிகள்


அறிவுக் கொடையாக அளித்தார் சர் ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ விஞ்ஞானி!

மருத்துவ உலகம் ரெனால்டு ரோசைப் பெருமையோடு பாராட்டி யதோடு நில்லாமல், அதற்கான வாழ்த்துக்களையும், பரிசுகளையும், பதவிகளையும் வழங்கியது. அந்த மருத்துவ விஞ்ஞானி கண்டறிந்த மலேரியா கொசுவின் பெயர்தான் அநோபில்ஸ் என்ற மருத்துவத் துறையின் புதிய கண்டு பிடிப்பு ஆகும்.

சர். ரொனால்டு ரோஸ் செய்த மலேரியா ஆராய்ச்சி அவருக்கு உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதனால், அரும் பெரும் மருத்துவ விஞ்ஞானிகள் பட்டியலில் இந்த மேதையும் இடம் பெற்றார்.

பேட்ரிக் மான்சன் என்ற மருத்துவச் சான்றோன் ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ ஞானிக்கு நண்பரானார்! பாட்ரிக் மான்சன்; தான் கண்டறிந்த ஆய்வுப் புதையல் உண்மைகளை, மருந்து சம்பந்தமான கட்டுரைக் கருவூலங்களை, வேறு சில ஆராய்ச்சிகளின் அரிய கருத்துக்களை ரொனால்டு ரோசுக்கு வழங்கி, அவரைப் பாராட்டிப் போற்றினார்.

பேட்ரிக் மான்சனின் அரிய நட்பால் ரோஸ் புகழ் மருத்துவ உலகுக்கு வளர்பிறையானது. அதனால், மருத்துவத் துறை வட்டத்தில், மேதையெனும் புள்ளியாய் இணைப்பையும் பெற்றார் ரோஸ்.

மலேரியா கொசுவின் அநோபில்ஸ் கண்டு பிடிப்பிற்குப் பிறகு, இந்திய மருத்துவத் துறையை விட்டு விலகி, இங்கிலாந்து சென்றார் சர்.ரொனால்டு ரோஸ்!

அப்போதுதான் லிவர்பூல் எனும் பெரு நகரில், ‘ஸ்கூல் ஆஃப் டிரோபிக்கல் மெடிசன்ஸ்’ எனும் ஒரு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரியின் முதல் விரிவுரை யாளராக ஓர் இந்திய மண்ணில் பிறந்த விஞ்ஞான மேதை நியமிக்கப்பட்டப் புகழுக்கு ஆளானார்! இது இந்திய மருத்துவ விஞ்ஞானத்துக்குக் கிடைத்த பெருமைதானே!