பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

97


இந்தக் கல்லூரியின் வசதிகளைப் பயன்படுத்திக் கொண்ட ரோஸ், மலேரியாவைச் சிக்கனமான முறையில் குணப்படுத்தும் தடுப்பு முறைகளைக் கண்டு பிடித்தார். கோடையின் கடுமை மிகுந்த வெப்ப நாடுகளில் மலேரியா என்ற காய்ச்சல் நோய் தடுத்து நிறுத்தப்பட்டது.

மலேரிய நோய் ஒழிப்பை உலகெலாம் பரப்பிட, உலக நாடுகள் ஒவ்வொன்றும் அவருக்கு அழைப்பு விடுத்து அழைத்தன. அவற்றை ஏற்ற அந்த மருத்துவ விஞ்ஞானி, உலக சுற்றுப் பயணம் சென்றார்.

சென்றபோது, வெள்ளைக்காரர்களின் கல்லறை என்று பெயர் பெற்ற சீயராவியோன், என்ற நகரத்திற்குச் சென்றார். அங்கு மலேரியா நோய் ஒழிப்பு பற்றியும், கொசுக்கள் அழிப்புப் பற்றியும் சொற்பொழிவாற்றி மருத்துவ அறிஞர்களது பாராட்டுதல்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த நகரின் ஆளுநரை அழைத்து மலேரியா நோய் ஒழிப்பு முறைகளை விளக்கினார். இதன் பயனாக, ஈக்கள், கொசுக்கள் உற்பத்திள் ஒழிக்கப்பட்டன.

வீதிகளிலும், தெருக்களின் சந்து பொந்துகளிலும் உள்ள சாக்கடைகள் சுத்த மாக்கப்பட்டன: சதுப்பு நிலங்கள் ஈரமில்லா நிலங்களாக்கப்பட்டன! தேங்கிக் கிடக்கும் அசுத்த நீரில் எண்ணெய் தெளிக்கப்பட்டது. அதனால், கொசுக்களின் உற்பத்தி நிலையங்கள் தடை செய்யப்பட்டன!

கொசு உற்பத்தி அழிப்புப் பணி

பொது இடங்களிலே உள்ள பயனற்றப் பொருட்கள்; குப்பைக் கூளங்கள்; பழக் கூடைகளின் அசுத்தங்கள் எல்லாமே அகற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டன! கொசு உற்பத்தி அழிக்கப்பட்டது.

தெருக்கள் பள்ளங்கள் நிரப்பப்பட்டன; உடைந்த சாக்கடைகள் எல்லாம் சீர் செய்யப்பட்டன; இதன் பயனாக கொசு