பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மர இனப் பெயர்கள்

பிள்ளைத் தாய்ச்சி. எனவே, கெர்ப்பக் கொடி, சொல் விளையாட்டாக இப்பெயர் பெற்றது.

பிள்ளை மகன்=தென்னையைத் தென்னம் பிள்ளை எனல் மரபு, இந்தப் பிள்ளையின் மகன் தேங்காய். எனவே, தேங்காய் பிள்ளை மகன் எனப்பட்டது. சார்பு.

பிள்ளை மகன் இளையோன்=தென்னம் பிள்ளையின் மகனாகிய தேங்காய்க்கு இளையவன் இளநீர் ஆகும். எனவே, இளநீர் இப்பெயர்த் தாயிற்று. சார்பு. உடற்கூறு. பிள்ளை மரம் = தென்னம் பிள்ளை - தென்னை மரம், -

பிறைமலர் = அகத்திப் பூ பிறை வடிவாயிருக்குமாத லின் பிறை மலர் எனப்பட்டது. வடிவம்.

பீநாறிச் செடி = தீய நாற்றம் உடைய சங்கஞ் செடி முதலியன பீநாறிச் செடியாகும். பண்பு.

புல் மரம் - உள் வயிரம் இல்லாத-வெளி வயிரம் மட்டுமே உடைய பனை, தென்னை, மூங்கில் முதலியன புல் மரம் எனப்படும்.

புறக்காழனவே புல்லெனப் படுமே” (86) என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா. புறக்காழ் = வெளி வயிரம். சிலப்பதிகாரத்தில் உள்ள,

" தாலப் புல்லின் வால் வெண்தோடு'- (16-35) என்னும் பகுதியி லுள்ள தாலப்புல் என்பது பனையைக் குறிக்கிறது. உடற்கூறு.

புழுக்கொல்லிப் பாளை: ஆடுதின்னாப் பாளை புழு பூச்சிகளைக் கொல்லுமாதலின் இப்பெயர்த்து. பயன்.