பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மர இனப் பெயர்கள்

மண்ணரசு மரம்: பூவரச மரம் இது, பூ=பூமி=மண். எனவே, சொல் விளையாட்டாக இப்பெயர்த்தாயிற்று.

மண்ணில் வேந்தன் பழம் : மண்ணில் வளரும், பழங் களுக்குள் எடுப்பான பளபளப்பான தோற்றத்துடன் இருப்பதால், எலுமிச்சம் பழம் இப்பெயர்த்தாயிற்று. தலைமை.

மண்ணில் வேந்தன் மரம்: மண்ணில் வளரும் அரச மரம் சொல் விளையாட்டாக இப்பெயர்த் தாயிற்று.

மதகரித் திப்பிலி = மதகரி: யானை. எனவே, யானைத் திப்பிலி சொல்விளையாட்டாக இப்பெயர் பெற்றது.

மந்தைப் பெருச்சாளி: வீட்டுப் பெருச்சாளியே பெரிதா யுள்ளது - சமாளிக்க முடியவில்லை. பொது வெளியான மந்தைக் கரைப் பெருச்சாளி எங்கும் சுற்றித் திரியும். அதுபோல, தூதுவளைக் கொடி, படரத் தொடங்கினால் அங்கிங்கு எனாதபடி அரக்கன் போல் எங்கும் பரவிப் படர்ந்துவிடும். அதனால் தூதுவளை இப்பெயர் பெற்ற தெனலாம். ஒப்புமை.

மலையரசி மரம்: சந்தன மரம் மலைக்கு அரசி எனச் சொல்லும் அளவுக்குச் சிறந்ததாதலின், மலையரசி மரம்

எனப்பட்டது. தலைமை.

மாதேவிச் செடி மாதேவி = சீதேவி. எனவே, சீதேவி செங்கழுநீர்ச் செடி சொல்விளையாட்டாக இப் பெயர்த்தாயிற்று.

மாலுார்திக் கொடி : மால் = திருமால்; ஊர்தி = வாகனம்; மாலூர்தி = திருமாலின் ஊர்தியாகிய கருடன். எனவே, கருடன் கொடி சொல்விளையாட்டாக இப்

பெயர்த்து.