பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 107

தன்மராசா: இது - பாலைமரம். பாலையில் பல வகை உண்டு. பொதுவாகப் பாலை பயன்கள் பல நல்கு வதால் தன்மராசா (தருமராசா) எனப்பட்டது.

திரிபுரம் எரித்தான். நொச்சி. குப்பை மேனி முதலியன போல் வெப்பம் தருவதாதலின், தீக்கடவுளாம் சிவன் பெயராகிய திரிபுரம் எரித்தான் எனும் பெயரை நொச்சி சொல் விளையாட்டாகப் பெற்றது.

திருட மூலம்-திருட பழம்-இது தேங்காய். திருடம் = வலிமை. தேங்காய் (முற்றியகாய்=பழம்) வன்மையான ஒட்டுடன் இருப்பதால் இப்பெயர்கள் பெற்றது. வடிவம்.

திருடன்: திருமாலுக்கு மாயன் என்னும் பெயர் உண்டு. மாயன் என்பதற்குத் திருடன் என்னும் பொருளும் சொல் லலாம். மாயம் = திருட்டுத்தனம். திருமால் கண்ணன் பிறவியில் வெண்ணெய் திருடினாரல்லவா? விஷ்ணு= திருமால். எனவே, விஷ்ணு கரந்தை சொல் விளை யாட்டாகத் திருடன் எனப்பட்டது.

திரிதேகி: பற்படாம்; இது பித்தம், தலை மயக்கம் ஆகியவற்றுக்கு நல்ல ஒரு பூடு. இது முப்பிரிவாயிருப்ப தால் திரிதேகி எனப்பட்டது. வடிவம்.

இறைவன் சிவன் இறைவன். எனவே, சொல் விளை யாட்டாகச் சிவனார் வேம்பு இறைவன் எனப்பட்டது.

ஆவி பத்திரம்: ஆவி=புகை; பத்திரம் இலை; எனவே, புகையிலை சொல்விளையாட்டாக இப்பெயர்த்தாயிற்று.

தென்: இதுதென்னை. தென் என்பது அழகு, இனிமை என்றெல்லாம் பொருள்படும். இனிய நீரையும் காயையும் உடைமையால் தென்னை ‘தென்’ எனப்பட்டது. பண்பு.