பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசம்பின் பெயர்கள்

வசம்பின் பெயர்கள்

1. பெயர் சொல்லாதது (சி.வை.அ.), பெயர் சொல்லர் மருந்து (ஜூ), பெயர் சொல்லான் (சா.சி.பி.) என்னும் பெயர்கள் வசம்புக்குத் தரப்பட்டுள்ளன. சில இன்றியமை யாப் பொருள்களின் பெயரைச் சொன்னால், அவற்றால் விளையக்கூடிய நன்மை கைகூடாது பலிக்காது என்ற எண்ணத்தால் மக்கள் அவற்றின் பெயர்களைச் சொல்வ தில்லை. அவை உப்பு, கடுக்காய் முதலியனவாகும். உப்பு என்று சொல்லாமல், சாப்பாட்டுக்குப் போட்டுக்கொள்வது என்பர். அதேபோல், வசம்பைப் பேர் சொல்லாதது என்பர். இஃது ஒருவகை (மூட) நம்பிக்கை. இவை சார்பினால் வந்த பெயர்கள்.

2. பேதியைக் கட்டு மூலிகை (சி.வை.அ.), கிராணித் திரவியம் (சி.வை.அ.) என்னும் பெயர்கள் இதற்குண்டு. பேதி, கிராணி என்பன வயிற்றுக் கழிச்சல் நோயாகும். வசம்பைச் சுட்டுக் கரியாக்கித் தேனில் குழைத்துக் கொடுத் தால் கழிச்சல் நின்றுவிடும். இவை பயனால் வந்த பெயர்கள்.

3. பிள்ளை மருந்து (ஜூ), பிள்ளை வளர்த்தி (பொ.ப. நூ.), பிள்ளை வளர்ப்பான் (த.பே.அ.) என்னும் பெயர் களும் உண்டு. குழந்தைகள் உள்ள வீட்டில் வசம்பு எப்போதும் கைவசம் இருக்கும். குழந்தைக்குக் கழிச்சல் ஏற்படின், வசம்பைச் சுட்டுக் கரியாக்கித் தேனில் குழைத்