பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மர இனப் பெயர்கள்

தேவி: தேவி சீதேவியைக் குறிக்கும். எனவே, சீதேவி செங்கழுநீர் இப்பெயர்த்து. சொல் விளையாட்டு.

நண்பன்: இது சணல், நண்பனைப் போல் சணல் பல வேலைகட்கும் உதவுவதால் நண்பன் எனப்பட்டது. ஒப்புமை.

நாமம்: நாமம் என்பதற்குக் கருமண்தும்பை என மூலிகை வைத்திய அகராதி பொருள் தந்துள்ளது. வைணவர் நெற்றியில் இடும் நாமத்திற்குத் திருமண்' என்னும் மங்கலப் பெயர் உண்டு. கருமண் தும்பை என்னும் பெயரிலும் மண்” என்பது உள்ளது. எனவே, சொல்விளையாட்டாகக் கருமண் தும்பை நாமம் எனப் பட்டதோ? நாமம் என்றதும் திருமாலும் அவரது வைகுண்ட மும் நினைவுக்கு வரலாம், இதனால், தும்பைக்கு, நாமம், வைகுண்டம், நாமவைகுண்டம் என்னும் முப்பெயர் களும் தரப்பட்டுள்ளன போலும்! சார்பு.

இன்னுமொரு காரணம்: நாமம் என்பது திருமாலின் திருவடியைக் குறிக்கும் ஒரு குறியீடு என்பது ஒரு சாராரின் கருத்து. தும்பைப் பூவின்தோற்றம், காலடியைப் போலவே இருக்கும். இதனால் தும்பைக்குப் பாத மலர்' என்ற பெயரும் உண்டு. எனவே, வடிவ ஒற்றுமை கருதித் தும்பைக்கு நாமம் சாத்தப்பட்டிருக்கலாமோ? வடிவம்.

நோவு: இது மஞ்சள். நெடுநேரம் எண்ணியும் தெரி வான காரணம் தெரியவில்லை. நோ= பிணி. ஒருவேளை மஞ்சள் என்றதும், மஞ்சள் காமாலை என்னும் நோவு நினைவுக்கு வருமோ? அதனால் மஞ்சள் சொல்விளையாட் டாக நோவு எனப்பட்டதோ? அல்லது,-நோவு என்பதற் குச் சிதைவு என்னும் ஒரு பொருள் உண்டு. பூசு மஞ்சள் அணு அணுவாகக் கல்லில் இழைத்துச் சிதைக்கப்படுவதால் மஞ்சள் இப்பெயர் பெற்றதோ? இருவர் வாய்ச் சண்டை