பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மர இனப் பெயர்கள்

காஸ்மீரம்: குங்குமப்பூ காஸ்மீரத்தில் மிகுதியாக உண்டாகி எங்கும் அனுப்பப்படுவதால், காஸ்மீரம் எனப் பட்டது. இடம்.

கிருட்டிண பாணம்: எட்டிமரம் இது. கிருட்டிணன் இறுதிக் காலத்தில், ஒரு மரத்தில் அமர்ந்திருந்த போது, அவனது காலடியின் அசைவை ஒரு புறா என எண்ணிச் சரன் எனும் வேடன் அம்பு தொடுக்க, அது கி ருட்டிணன் மேல்பட அதனால் உயிர் துறந்தான். கிருட்டிணன் அமர்ந் திருந்த மரம் எட்டி மரம் என்று சிலரும் வேறு மரம் என்று சிலரும் கூறுவர். கிருட்டிணன் அமர்ந்தது எட்டி மரமா யின், கிருட்டிணன் மேல் பானம் (அம்பு) தொடுக்கப்பட்ட மரம் என்னும் பொருளில், இப்பெயர் எட்டி மரத்திற்குப் பொருந்தும்; இல்லையேல் இல்லை. சார்பு. தரையில் படுத்திருந்தபோது மான் என எண்ணி வேடன் அம்பு எய்ததால் கிருட்டிணன் இறந்தான் என்பாரும் உளர்.

குடல் பற்றாப் பிஞ்சு=காய்களின் இளம் பிஞ்சுகளில் குடல் போன்ற பகுதி தோன்றிச் சரியாக உருவாகவில்லை யாதலின், பொதுவாக, இளம் பிஞ்சு, குடல் பற்றாப்பிஞ்சு எனப்படும். வடிவம்.

குதிரைக்குளம்பு-நீர்க் கரைகளில் வளரும் நீர்க்குளிரி' என்னும் பூண்டின் அடிப் பகுதி குதிரைக் குளம்புபோல் இருக்குமாதலின், இப்பெயர் பெற்றது. ஒப்புமை.

குரு உபதேசம்=ஒமம் இது. குரு உபதேசம் உயிருக்கு நலம் புரிவதுபோல், ஓமம் உடலுக்கு நலம் புரிவதால் குரு வுபதேசம் எனப்பட்டது எனலாம். ஒப்புமை. மற்றுமொரு காரணம். ஒமம் என்னும் சொல்லுக்கு வேள்வி (யாகம்) என்னும் பொருளும் உண்டு. குரு உபதேசிக்க இயற்றும் ஓமம் என்னும் பொருளில் சொல் விளையாட்டாக இப்பெயர் பெற்றது எனவும் கூறலாமன்றோ? 'ஓம்' என்னும் பிரணவமும் கருதத்தக்கது.