பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 115

குல வலி = இலந்தை யிது. குலம் என்பது இங்கே இலந்தை இனம் ; வலி = வலிமை. 80 அடி உயரமும், 23 அடிகொண்ட அடியும், அங்குலத் தடிப்புள்ள மேல் பட்டையும் உடைய இலந்தை மரம் மத்தியப் பிரதேசத் தில் இருந்ததாம். இலந்தை மரம், வலிமை - திண்மை - உறுதி - கடினம் உடைய தாதலின் இது குலவலி (வலிமை கொண்ட மர இனம்) என்னும் பெயர் பெற்றிருக்கலாம். வடிவம்.

குளிர்ந்து கொல்லி= இது கோவைக் கொடி. கோவை, உடலுக்குக் குளிர்ச்சி தந்து மற்ற பிணிகள் பலவற்றைக் கொல்லுவதால் இப்பெயர்த்து. பயன். அ.கு.பா. பாடல்:

' கண்ணும் குளிர்ச்சி பெறும் ... . நண்ணுடல

மீதிலார் வெப்பு அகலும்; விழா நீர்க்கட்டு ஏகும்; கோதிலாக் கோவை யிலைக்கு வாயின் அரோசகம் போம்; மாறா அழலையறும்’

கண் குளிர்ச்சி, உடல் வெப்பம் அகற்றல், நீங்காத அழலையை (வெப்ப அழற்சி) நீக்கல் முதலிய பயன்கள் உள்ளமை காண்க.

கூர்ச் சேகரம்-கூர்ச்ச சேகரம். இது தென்னை. கூர்ச்சு-கூர்ச்சம்= கூர். சேகரம்=தலை-உச்சி. தென்னை மரத்தின் உச்சியில் புதுக் குருத்து மட்டைகள் விண்ணை நோக்கிக் கூர்மையாய் நிற்பதால் இப்பெயர் பெற்றது. வடிவம் (காண்க உச்ச தரு).

கொழுக்கட்டை=இது மோதக வல்லிமரம். மோதகம் என்றால் கொழுக்கட்டை; எனவே, சொல்விளையாட்டாக இம்மரம் கொழுக்கட்டை எனப்பட்டது.

கொறடா = சவுக்கு மரம் இது. அடிக்கும் சவுக்கு, குதிரைச் சவுக்கு ஆகியவற்றிக்குக் கொறடா என்னும்