116 மர இனப் பெயர்கள்
பெயர் உண்டு. இப்பெயர் சொல்விளையாட்டாகச் சவுக்கு மரத்திற்குத் தரப்பட்டுள்ளது.
கோடைக்கு வாடன்=ஆவிரை இது. கோடையில் வெயிலில் இது வாடுமாகையால் இப்பெயர்த்தாயிற்று. காலம்.
கோபி, கரு நொச்சி இது. கோபி: கோபம் உடை யவன். கறுப்பு:கருமை கோபத்தைக் குறிக்கும்.
'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’ (76) என்பது தொல்காப்பிய - உரியியல் நூற்பா. வெகுளி = கோபம். எனவே கருநிற நொச்சி, சொல்விளையாட்டாகக் கோபி எனப்பட்டது.
சடைக்கந்தம்: கந்தம்= மணம், மணத்துடன் சடை சடையாகத் தோற்றமளிக்கும் வசம்பு இப்பெயர்த்து. வடிவு. -
சட்டி வட்டு: வட்டு=திரண்ட வடிவம். கப்பல் வள்ளிக் கிழங்கு சட்டி போன்ற திரள் வடிவமுடைய தாதலின் சட்டி வட்டு எனப்பட்டது. வடிவம்.
சதா மூர்க்கம்: பாம்பைக் கொல்லும் தன்மையுடைய பாம்பு கொல்லிப்பூடு, சதா மூர்க்கமானது எனலா மன்றோ? பண்பு.
சத்த பர்ணி; சத்தம்=ஏழு; பர்ணி-இலையுடையது. ஏழிலைக் கொத்துடைய ஏழிலைப் பாலை, வடமொழி யில் சத்தபர்ணி எனப்படும். மொழி பெயர்ப்பு. வடிவம்.
சவுரி: இது முதியார் கூந்தல் என்னும் மர இனமாகும். சவுரி என்பது கூந்தல், மயிர். எனவே, சொல் விளையாட் டாக, முதியார் கூந்தல், சவுரி எனப்பட்டது.