பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மர இனப் பெயர்கள்

துக் குழந்தையின் நாக்கில் தடவுவார்கள் - கழிச்சல் குண மாகும். இவையும் பயனால் பெற்ற பெயர்கள்.

4. வேசி (பரத்தை) மயக்கிக் காம இன்பம் தருதல் போல், வசம்பு வயிற்றை ஒழுங்கு செய்து பசியுண்டாக்கி உணவு (ஆகாரம்) கொள்ளச் செய்வதால் இதற்கு ஆகார வேசி (சா.சி.பி.) என்னும் பெயரும் உண்டு. இஃதும் பயனால் வந்த பெயரே.

5. வசம்பு நல்ல ம்னம் (வாச்னை) உடையதாதலின் ‘வெகுவாசம் உடையோகி (சர்.சி.பி.) என்ற பெயர் இதற்கு உண்டு. இது பண்பினால் வந்த பெயர்.

6. வசம்பைச்சுட்டுத் தண்ணிலோ அல்ல து தேனிலோ உரைத்துக் (இழைத்துக்) கொடுப்பதால் 'சுடுவான்', 'உரைப்பான்' என்னும் பெயர்களும் (பொ.ப.நூ.) உண்டு. இவை சார்பினால் வந்த பெயர்கள்.

7. வசம்பு, பாம்புகடி முதலிய நஞ்சைப் போக்குவ தாலும், புழு-பூச்சிகளைக் கொல்லுவதாலும் இதற்குப் ‘பூச்சி கொல்லி என்ற பெயர் பயனால் வந்தது. இ.சா. தேரையர் குணபாடப் பாடல்:

'பாம்பாதி நஞ்சற் புதப்பூண்வலி விடபாகம் குன்மம். தாம்பாம்கிருமி யிவையேகும் ஆசி வசம்பினையே’ *

தாம்பாம் கிருமி = தாம்பு (கயிறு) போல் நீளமாயிருக் கும் நாடாப்புழு. இப்புழுக்களையும் வசம்பு கொல்லுமாம். த.பே.அ.