பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மர இனப் பெயர்கள்

சீவ சாதனம்: சீவன் = உயிர்; சாதனம் = ஆதாரம். உயிர் பிழைக்க ஆதாரமாக உதவும் தானிய வகைகள் சீவ சாதனம் எனப்பட்டன. பயன்.

சுகப் பிரியை. சம்பு நாவல் சுகத்தையும் பிரியத்தை யும் தருவதால் இப்பெயர்த்து. பயன்.

சுண்ண அரசி: இது முல்லை. சுண்ணம் என்பதற்கு மலர் என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட் டுள்ளது. முல்லை, மலர்களின் அரசியாயிருப்பதால் இப்பெயர்த்து. தலைமை. இதற்கு இன்னும் ஒரு பெயர்க் காரணம் கூறலாம். சுண்ணம் என்பதற்கு வெண்மை எனச் சார்புப் பொருள் கொண்டு, வெண்ணிறத்தில் முல்லை சிறந்தது என்றும் கூறலாம். பெண்களின் வெண்பல்லுக்கு முல்லை ஒப்பல்லவா?

சுப்பிரமணியம்: மிளகு இது. சுப்பிரமணியர் மலைமேல் இருப்பவர். ஈண்டு தொல்காப்பியம் அகத்திணையியலில் உள்ள

"சேயோன் மேய மைவரை உலகமும்” (5) என்னும் நூற்பாப் பகுதி எண்ணத்தக்கது. மிளகும் மலை யில் வளர்வது; அதனால் மிளகுக்கு மலையாளம், மலை யாளி என்னும் பெயர்கள் உண்டு. எனவே, இட ஒப்புமை யால் மிளகு சுப்பிரமணியம் எனப்பட்டது.

சுராகாரம்: இது தென்னை. சுரர் - ஆகாரம் = சுராகாரம். சுரர் = தேவர். தேவர்களும் மது அருந்துவர். சுரருக்கு மதுவாகிய ஆகாரமாயிருப்பதால், தென்னை சுராகாரம் எனப்பட்டது. சார்பு. ஆகாரம் என்பதற்கு உருவம் என்ற பொருளும் உண்டு. தென்னை, தேவர் உலகம் வரையும் உயரமாக வளர்வது என்ற உயர்வு

நவிற்சிப் பொருளும் கூறலாமோ?