பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 125

' பச்சைமா மலைபோல் மேனிப் பவளவாய்க்

கமலச் செங்கண் அச்சுதா அமர ரேறே ...” (873) திருமாலின் தோற்றம் பச்சை மலைபோல் இருக்கிறதாம். இலக்கிய மரபின்படி இதனை நீலமலை என்றும் கொள்ளலாம். நீலம் தரும் அவுரி, பரப் பிரம்ம சைலம் எனப்பட்டது. சொல் விளையாட்டு - ஒப்புமை - நிறம்.

பலவிளக்கு: செந்நிறப் பூ உடைய செந்நாயுருவி பல விளக்கு எரிவதுபோல் இருப்பதால், பல விளக்கு' எனப் பட்டது. வடிவம்.

பலினி: பலம் = பழம். காய்த்துப் பழுத்திருக்கும் மரம் பொதுவாகப் பலினி எனப்படும். பயன், வடிவம்.

வாதமூலி: வாதம் = வளி-வாய்வு. நெருஞ்சில் வாதம் போக்குவதால் வாத மூலி எனப்பட்டது பயன்.

அ.கு.பா. பாடல்:

' நல்ல நெருஞ்சிலது நாளுங்கிரி சரத்தை ...

கூனுறு மெய்வாதமும் போக்கும்'பாதம்: மரத்தின் அடியில் வேர் இருப்பதால், மர வேர் பாதம் எனப்படும். பாதம் என்பது மக்களின் அடிப்பகுதி யாகிய கால் அல்லவா? மக்கள் தம் காலால் (பாதத்தால்) இடம் விட்டு இடம் பெயர்வர். மரம் இடம் விட்டு இடம் பெயர முடியாது; அதனால், மரம் நிலைத்திணை (அசரம்) எனப்படும். ஆயினும், மரத்தின் வேர்கள் மக்களின் கால்கள் போல், நிலத்திற்குள்ளே, பல இடங்கட்கும் பெயர்ந்து சென்று, நீர், ஆற்றல் பொருள் ஆகியவற்றைக் கொண்டு வந்து மரம் வளர உதவுவதால் பாதம்' எனப்பட்டன. ஒப்புமை.

புலியடிக் குலை: வாழைக் குலை. புலி அடியைப் போல் இருப்பதால் இப்பெயர்த் தாயிற்று. வடிவம்,