பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுக்காயின் பெயர்கள்

கடுக்காயின் பெயர்கள்

1. பொதுப் பண்பு: கடுக்காய் தாயினும் சிறந்தது; தாய் சுவையான உணவு ஊட்டி உடலை வளர்ப்பாள்; கடுக்காயோ, பிணிகளைப் போக்கி உடலைத் தேற்றி உயிரை நீட்டிக்கச் செய்யும். அகத்தியர் குணபாடப் பாடல்: -

"கடுக்காயும் தாயும் கருதில் ஒன்றென்றாலும்

கடுக்காய் தாய்க்கதிகம் காண்நீ - கடுக்காய் நோய் ஒட்டி உடல்தேற்றும்; உற்ற அன்னையோ சுவைகள் ஊட்டியுடல் தேற்றும் உவந்து'2. நோய் போக்குவதால் உரோகிப் பண்டிதன்' என் பதும், குழந்தைகளை வளர்ப்பதால் குழவித்தாய்’ என்ப தும், உயிரை வளர்ப்பதால் 'பிராண்தாது” என்பதும் கடுக் காயின் பெயர்களாகக் (சா.சி.பி.) கூறப்பட்டுள்ளன.

உரோகி = நோயாளி; பண்டிதன் = மருத்துவன்; பிராணன் = உயிர்.

3. வாழ்க்கையில் உடலைத் தேற்றி நல்ல செயல்கள் செய்வித்து வெற்றியுண்டாக்குதலால் விசயன்' என்னும் பெயரும், அச்சம் அகற்றி நல்வாழ்வுக்கு உறுதியளிப்பதால் "அபயன்’ என்னும் பெயரும், தெய்வ அமிழ்தம் போல் உயிரை நீட்டிப்பதால் அமிர்தம் (அமுதம்) என்னும்பெயரும் (சா.சி.பி.) தரப்பட்டுள்ளன. கடுக்காய் வகைகள் பல. அவற்றுள் விசயன் கடுக்காய், அபயன் கடுக்காய், அமிர்தக்