பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு நூல்களிலிருந்து

ஆறுமணிப்பூ = மாலையில் ஆறு மணி அளவில் மலரும் ஒருவகைப் பூடுப் பூ, காலம். இது, சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் கூறப்பட்டுள்ளது.

இரும்பிலி = இரும்பைத் தங்கமாக்கும் செடி யிது. பண்பு-செயல் (த.பே.அ.)

பிடுங்கு கீரை = முளைக்கீரையைப் பறிப்பதோ - கொய்வதோ - இணுக்குவதோ - ஒடிப்பதோ இல்லை. முளைக்கீரை மண்ணிலிருந்து பிடுங்கப்படுவதால் பிடுங்கு

கீரை எனப்பட்டது. சார்பு. (த.பே.அ.)

y பூப்படை - பூப் பலி - பூ மடை = மலர் வழி

பாடாகிய அர்ச்சனைக்கு உரிய பூ வகைகள் எல்லாம் இப் பெயர்கள் பெறும். படை - பலி - மடை என்பன ஒரு பொருளனவே. இ.சா.:

சிலம்பு: 28 - 231, 232: ' பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி

வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து’ -

சீவக சிந்தாமணி:

" வண்டுசூழ் பூப்பலி சுமந்து தான்வலம்

கொண்டு சூழ்ந் தெழுமுறை யிறைஞ்சி' - (3052)

அர்ச்சனை என்னும் வடமொழிச் சொல்லுக்கு நேரான பூப்படை, பூமடை என்னும் சொற்கள் உள்ளமை காண்க. (த.பே.அ.)