பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 137

மாயோன் பூடு = மாயோன் = திருமால். எனவே, திருமாலுக்கு உரிய துளசி இப்பெயர்த்து. சார்பு. (சங் - அக.)

முட்செவ்வந்தி = முள்செவ்வந்தி. சிவப்பு ரோசா

இது. ரோசாவில் முள் இருக்குமாதலின் முள்செவ்வந்தி எனப்பட்டது. வடிவம். (த.பே.அ.)

மூவட்சி = மூ = மூன்று; அட்சி = கண் உடையது. மூன்று கண் உடைய தேங்காய் இது. வடிவம். (தைலவ.)

வம்புக்காய் = பருவம் தவறிக் காய்க்கும் காய் பொதுவாக வம்புக்காய் எனப்படும். வம்பு = வம்பான மாறுதல். வம்பு என்பதற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு. திடீரெனப் புதிதாய்க் காய்க்கும் காய் எனவும் கூறலாம். பண்பு. (யாழ். அக.)

வானம் பார்த்த பிறவி = மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய மர இனங்கள் அத்தனையும் மழை நீருக்காக வானத்தை எதிர்நோக்கியிருப்பதால், பொதுவாக, மர இனங்கள், "வானம் பார்த்த பிறவி' எனப்பட்டன. சார்பு (யாழ் - அக.). ஈண்டு,

“ விசும்பின் துளிiழி னல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது’ - (16)

என்னும் குறட்பா ஒப்பு நோக்கத் தக்கது.

அழகு வண்ணத்தி = இது மருதாணி. பெண்கள் கை விரலிலும், கால் விரலிலும், உள்ளங்கை - உள்ளங் கால்களிலும் பூசிக்கொண்டால் அழகாக இருக்கும். நிறம் கவர்ச்சி தரும். வண்ணம் = நிறம். வண்ணத் தி = வண்ணம் உடையவள். எனவே, மருதாணி அழகுவண்ணத்தி எனப்பட்டது. நிறம். (சா.சி.பி.) ۹۶ کمیت