பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மர இனப் பெயர்கள்

கடுக்காய் என்னும் வகைகளும் உண்டு. இம் மூவகைக் கடுக் காய்களைப் பற்றிக் கூறும் அ.கு.பா. பாடல்கள் வருமாறு: விசயன் கடுக்காய்:

"விசயன் எனுங் கடுக்காய் வீரியத்தைச் சொல்வோம்

நிசமதுதான் வாதத்தை நீக்கும் - மிசையுரைக்கப் பேய்ச்சுரைக்காய் போலிருக்கும் பேரவந்தி யாதேசம் வாய்ச்சிருக்கும் அக்காயை வாழ்த்து'

அபயன் கடுக்காய்:

"அபயன் எனுங்கடுக்காய் அங்கநோ யெல்லாம்

அபயம் இட்டோட அடிக்கும் - அபயற்கு

அதிக நிறங்கறுப்ப தாகும் விளைபூமி பொதிய மலையாம் புகல்"

அமிர்தக் கடுக்காய்:

"அமிர்தம் எனுங் கடுக்காய் அம்புவியி லுள்ள

திமிர்த சிலேட்டுமத்தைத் தீர்க்கும் - விமிதச் சதைப்பற் றுண்டாயிருக்கும் சாற்றிலதன் தேசம் கதிக்கொத்த காசியென்பர் காண்”

4. கடுக்காய் நாட்பட்ட பழைய ம்லத்தை வெளி யாக்கி உடலுக்கு நன்மை பயப்பதால் 'மலத்தை அறுப் போன்’, ‘அமலன்’ என்னும் பெயர்கள் (சா.சி.பி.) தரப்பட் டுள்ளன. மலன் என்றால், மலத்தை வைத்திருப்பவன்; அமலன் என்றால், மலத்தை இருக்கச் செய்யாமல் அகற்று பவன் - என்பது பொருளாம். மக்களின் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை (மூன்று உலகச் சார்புக் கட்டுகளை) அகற்றுவதால் கடவுளுக்கும் அமலன் என்ற பெயர் தரப்பட்டுள்ளம்ை ஈண்டு ஒப்புநோக்கற்பாற்று.