பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மர இனப் பெயர்கள்

எண்ணான் = இது உளுந்து. இது நெடுநேரம் பெயர்க் காரணம் தெரிய வொட்டாமல் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் ஒருவாறு ஒரு பெயர்க் காரணம் புலப்பட்டது. எண் என்பதற்கு எட்டு என்னும் பொருள் உண்டு "எண் குணத்தான்’ என்னும் (9-ஆம்) திருக்குறள் ஆட்சி காண்க. எட்டு என்பதன் திரிபே எண் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. எட்டைக் குறிக்க எண்' என்னும் ஒரு சொல்லும் தனியே உள்ளதாகக் கொள்ள வேண்டும். இதன்படி நோக்கின், எண்ணான் என்பதற்கு எட்டாவதாக உள்ளவன் எனப் பொருள் கொள்ள வேண்டும். ஒன்பது (நவ) தானியங்களுள் உளுந்து எட்டாவ தாக ஜூபிலி தமிழ்ப் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை முறையே வருமாறு :

'தானியம் - 9 கோதுமை, நெல், துவரை, பச்சைப் பயறு, கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்’ என்பன வாகும். இப்பட்டியலில் உளுந்து எட்டாவதாக இருப்பது காண்க. இதனால் எண்ணான் என்னும் பெயர் பெற்றிருக்க லாமோ? ஏற்புடையதாயின் கொள்ளலாம். இல்லையேல் தள்ளலாம்.

கண்ணுக் கேற்றாள் = கொடி நெல்லி என்னும் நெல்லி வகை கண்ணுக்கு நலம் பயப்பதால் இப்பெயர்த்து.

Ll ll_! 6ðf ,

கண்ணொளி மூலி = கள்ளிச் செடிமேல் இருக்கும் ஒருவகைப் புல்லுருவிச் செடி இது. கண்ணுக்கு ஒளி தரும் பயன் உடைத்தாதலின் இப்புல்லுருவி இப்பெயர்த்து. பயன்.

கதிர் விடு தானியம் = நுனியில் (உச்சியில்) கதிர் விடுகின்ற நெல், கம்பு, சோளம், கேழ்வரகு முதலியன இப்பெயரின. உடல்கூறு.