பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ւDյ இனப் பெயர்கள்

உச்சியுடன் இருக்கும் பெரிய அறுகு வகை இப்பெயர்த் தாயிற்று. வடிவம்.

கருப்புவில்: இரும்பு + பாதை = இருப்புப் பாதை என வலித்தல் விகாரமாவது போல், கரும்பு + வில் கருப்புவில் என ஆகும். மன்மதன் கரும்பை வில்லாக உடை யவன் என்பது புராணச் செய்தியாதலின், கரும்பு, கருப்பு வில் எனப்பட்டது. சார்பு. .

கடல் விசிறி கடலில் விசிறிபோல் இருக்கும் பவளச் செடி-கொடி இப்பெயர் பெற்றது. இடம்.

கடலிச்சி: கடல் வாயிலாகச் சீனாவிலிருந்து வந்த சீனக் கற்பூரம் இப்பெயர்த்து. இடம்.

கடவுள். தேவதாரு மரம் இது. தேவ உலகத்தில் உள்ள கடவுள் தன்மையுடைய மரம் ஆதலின் இப் பெயர்த்து. தலைமை.

கன்னி குமரி: இளங்கற்றாழை இது. கன்னி, குமரி என்னும் சொற்கள், பெண்மையைக் குறிப்பதோடு, இளமை யையும் குறிக்கும். இளங்கற்றாழை, இளைய அழகிய பெண் போன்றிருப்பதால் இப்பெயர் பெற்றது. வடிவம்.

கன்னி நாகு: கன்னி, நாகு என்னும் சொற்கள் இளமையைக் குறிக்கும். இன்னும் காய்க்காத மிகவும் இளைய மரங்கள், கன்னி நாகு' எனப்படும். ஒரே பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் வரின், அந்த அமைப்பை ஒரு பொருள் பன்மொழி என இலக்கண நூலார் கூறுவர். கன்னி நாகு என்பதையும் இவ்வாறு கூறலாம். வடிவம்.

கனல் பாலி: தில்லை மரம் இது. கனல் = நெருப்பு; பாலி பால் உடையது பாலி. விரலால் தொட்டால்,