பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மர இனப் பெயர்கள்

நஞ்சு முறித்தான்: அவுரிச் செடி இது. நஞ்சை முறிக்கும் தன்மை பெற்றிருப்பதால், இது இப்பெயர்த் தாயிற்று. பண்பு-பயன்.

புராணம்: இது கடுக்காய். நீண்டநேரம் எண்ணிப் பார்த்தும் இதற்குச் சரியான-தெளிவான பெயர்க் காரணம் தென்படவில்லை. ஒருவேளை இப்படி இருக்கலாம். புராணம் என்னும் சொல்லுக்குப் பழமை என்னும் பொருள் உண்டு. பழைய பட்டறிவுச் (அனுபவச்) செய்திகளைக் கூறி மக்கட்கு நல்லறிவு புகட்டுவதனாலேயே சில நூல்கள் புராணம் எனப்படுகின்றன. காலையில் பழைய சோறு (பழையது) உண்பதற்குப் 'புராணம் படித்தல் என்னும் குழுஉக்குறிப் பெயர் வழங்கப்படுவ துண்டு. கடுக்காய், உடம்பில் நெடுநாளாயிருக்கும் பழைய அழுக்குகளைகுற்றங்களைப் போக்கி நலம் பயப்பதால் இப்பெயர் பெற் றிருக்கலாம். இங்கே, அகத்தியர் குண பாட நூலில் உள்ள

" அபயன் எனுங்கடுக்காய் அங்கநோ யெல்லாம்

அபயம் இட்டோட அடிக்கும் ” * பழமலத்தைப் போக்கும்; பகரில் உடலுக்கு

அழகு தரும்; புத்தி யளிக்கும் ” என்னும் பாடல் பகுதிகள் ஒப்புநோக்கத் தக்கன. பயன்.

மகாபேதை மருள் ஊமத்தை என்னும் ஊமத்தை வகை இது. மருள் சமயக்கம். ஊமத்தை பித்த மயக்கம் தருவது; வெறிநோய்-பைத்திய நோய் தருவது. மகா பேதை என்றால், பெரிய பைத்தியம் -பெரிய முட்டாள் என்று பொருள்படும். மருள் ஊமத்தை, மகாபேதைத் தனத்தை உண்டாக்குமாதலின், இப் பெயர்த்தாயிற்று. பண்பு. அ.கு. பா. பாடல்

' வாதமறும்; பித்த மயக்கமுறும்; மாநிலத்தில்

தீது கரப்பான் சிரங்ககலும் - கோதாய்கேள்!