பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 145

மாமத்த மாகும்; வறட்சியெல்லாம் போகும்; ஊமத்தங் காய்க்கென் றுரை '

' மாமத்தம் உண்டாம்; வளரிளங் கொங்கைத் திருவே

ஊமத்தம் தன்விதையை உன் -

(உன் நினைத்துப் பார்). (மத்தம்=வெறிநோய், பைத்தியம்). கருத்து ஊமத்தங் காயால் சில நன்மைகள் உண்டெனினும், பித்த மயக்கமும் பைத்தியமும் உண்டாக வழி உண்டு, ஊமத்தம் விதையும் அவ்வாறே செய்யக்கூடியது. பண்பு-பயன்.

மனோதயம் = எருக்கு இது, எருக்குக்கு அருக்கன் என்ற பெயர் உண்டு. அருக்கன் = ஞாயிறு. உலகின் இருள் போக்க ஞாயிறு உதயமாகிறது. எருக்கு மனத்தில் ஆண்மை (வீரிய) உணர்வு தோன்ற உதயமாகிறது. பயன்.

தேரன் வெண்பா:

" மன்னனையும் கையெடுக்க வைத்து, எயிற்றின்

நோயகற்றி உன்னு பிணிப்பகையை ஒட்டுதலால் - சொன்னேன் எருக்கெனவே பூமி யினிலே விளங்கும் அருக்கம் அருக்கன் என லாம்.”

மாங்காளி = இது வேளைக் கீரை, காளி கடுமை யானவள். வேளையும் கடுமையான வெப்பம் உடையதால்

இப்பெயர்த்து. பண்பு.

அ. கு. பா. பாடல்

" தக்க அனலும் பித்தும் தானெழும்பும் : சாந்தமின்றி,

அக்கரநோய் மிஞ்சும் அறி ’. அன்னை: இது கொன்றை. "இது குழந்தைகட்கும் பிள்ளைத் தாய்ச்சிக்கும் மெலிந்தவர்க்கும் மிக நன்மை பயக்கும். மலப் போக்கியுமாகும். இதைக் குறைந்த