பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 147

சகாதேவம்: ஏலக்காய் இது. பஞ்ச பாண்டவருள் ஒருவன் சகாதேவன். இப்பெயர் விளையாட்டாக ஏலக் காய்க்கு இடப்பட்டுள்ளது. சகா = தோழன், துணை. ஏலக்காய், மருத்துவம் - உணவு முதலிய பலவற்றிற்கும் துணை செய்வதால் இப்பெயர்த்து, பயன்.

சடாதரன். அருநெல்லி இது. அருநெல்லிக்காய் உடலுக்குக் குளிர்ச்சிதரும். சடாதரன் என்றால், சடையைத் தாங்கியிருக்கும் சிவன், சடையில் சிவன் கங்கையை அடக்கி வைத்துள்ளார் என்பது புராணக்கதை. அதனால் சடை குளிர்ச்சியானது என்று கூறப்படும்.

அருநெல்லி குளிர்ச்சி தரும் என்பதற்கு அ.கு.பா. பாடல் சான்று வருமாறு:

' அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம்பித்தம் போக்கும் மருவு துவர்ப்பால் துரிசை மாற்றும் - விரியுலகில் தாகத் துயர்நீக்கும் சாரிருமலைத் தொலைக்கும் ஆகக் கொதிப்பகற்றும் ஆங்கு’இப்பாடலால், குளிர்ச்சி தரல், தாகம் போக்கல், உடல் (ஆகக்) கொதிப்பு அகற்றல் ஆகிய பயன்களை அறியலாம். சிவன் கங்கையைச் சடைக்குள் அடக்கி வைத்துள்ளார் என்பதற்குச் சான்றாக, நாவுக்கரசர் தேவாரப்பாடல் பகுதி வருமாறு:

' கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்ப ராகில் அவர்கண் டீம் நாம்வணங்கும் கடவுளாரே'சிவனது சடை குளிர்ச்சியானது என்பதன் சான்றாக நாவுக்கரசரின் கோயில் பதிகத் தேவாரப் பாடல் வருமாறு:

' குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில்

குமிண்சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியில்

பால்வெண் ணிறும்,