பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மர இனப் பெயர்கள்

சிவனுக்குத் திரு வஞ்சகன் என்னும் பெயர் பொருந்தலாம் அல்லவா? இப்பெயர் சொல் விளையாட்டு வேடிக்கையாகச்

சிவனார் வேம்புக்கு இடப்பட்டுள்ளது.

திவாகரம்: சூரியகாந்தி இது. திவாகரம் = சூரியன். எனவே, சொல் விளையாட்டாகவும் சார்பினாலும் சூரிய காந்திக்கு இப்பெயர் தரப்பட்டது.

தேர் வாசம்: அரசு (மரம்) இது. தேரைக் கீழே நிழலில் நிறுத்தி வைக்கும் அளவுக்கு அரசமரம் பெரியதாய் விரிந்திருக்கும் என்ற பெயர்க் காரணம் சொல்வதல்லாமல், மற்றொன்றும் கூறலாம். அரசு என்பது இருபொருள் உடையதாக (சிலேடையாக) அரசரையும் குறிக்கும் அல்லவா? இக்காலத்தில் செல்வர்கள் விலையுயர்ந்த சிற்றுந்தில் (Pleasure car) செல்வதுபோல், அக்காலத்தில் அரசர்கள் தேரில் செல்வர். எனவே, இருபொருள் - சொல் விளையாட்டாக, அரசுக்குத் தேர் வாசம் என்னும் பெயர் தரப்பட்டிருக்கலாம் அல்லவா? சார்பு; சொல் விளையாட்டு. தேர் வாசம் செய்பவர் அரசர் (அரசு) அல்லவா?

தேவ புத்திரர்: இது வெந்தயம். தன்னை உண்டவர் உடலை வெந்தயம் தேவ குமாரன்போல் ஆக்கலாம் என்னும் கருத்தில் வெந்தயத்திற்கு இப்பெயர் ஏற்பட்டி ருக்கலாம். வெந்தயம் பல நோய்களைப் போக்குவதன்றி, உடம்பை வளமுறச் செய்யுமாம். தேரையர் காண்டப் பாடல் வருமாறு :

' வெந்தயம் தோசையாய் வேண்டி உண்டிட, உடல் மைந்துடன் பருத்திடும்; வலி,களை ஒழிந்திடும்; கருணையில் அஃதினைக் கலந்து அயின்றிட, உடல் உரமெனப் பருத்திடும் உண்மை யிதாகவே” -