பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 153

கருத்து வெந்தயத் தோசையை விரும்பி உண்டாலும், வெந்தயத்தைக் கருணைக் கிழங்கோடு கலந்து ஆக்கி உண்டாலும் உடம்பு வளமுறும்- என்பது. வீடுகளில் தோசை செய்வதற்கு, அரிசியுடன் வெந்தயம் கலந்து அரைத்து மாவாக்குவார்கள் என்பது அறிந்த செய்தியே. ஒருவகையில் இப்பெயர்க் காரணம் பொருந்தலாம். பயன்.

தேவர் கோன் = குளிர் நாவல் இது. நாவல் கனி குளிர்ச்சி தருவது; அதிலும், குளிர் நாவல் என்னும் ஒரு வகை நாவல் மிக்க குளிர்ச்சி உண்டாக்கும். குளிர்ச்சி யுண்டாக்குவது மழை. இம்மழையைப் பெய்விப்பவன் இந்திரன். இவன் தேவர்களின் கோன் (அரசன்) ஆதலின், தேவர் கோன் எனப்படுகிறான். குளிர்ச்சி தரும் மழை பெய்விக்கும் தேவர் கோனைப் போலக் குளிர்ச்சி தருவ தால், இம்மரம் தேவர் கோன் எனப்பட்டது. நாவல் குளிர்ச்சி தரும் என்பதற்கு அ.கு.பா. பாடல் சான்று:

“ வாய்வும் கடுப்பும் வருங் கொதிப்பும் தாகமும்போம்

து.ாய நாவல் பழத்தால் சொல்’’

" விந்தோடு அதிசீதம் iறுபலம் வெப்பையம்

மந்தமிவை உண்டாக்கு மால்'

' உதிரமொடு விந்துவையும் உண்டாக்கும் உள்ளே

அதிர் அழல் தன்னை அகற்றும்’

கடுப்பு, கொதிப்பு, தாகம், அழல் ஆகியவற்றைப் போக்குவது குளிர்ச்சி தரும் பொருள் தானே. அதிசீதம் என்றால் மிக்க குளிர்ச்சி. பண்பு-ஒப்புமை.

பல்லுக்கு வெளி = இது பாக்கு. பல்லுக்கு வெளியில் உள்ளவை ஈறும் உதடும் ஆகும். பாக்கு ஈறுக்கும் உதடுக்கும் நலம் பயக்கும்; ஈற்று நோய், உதட்டுப் புண் ஆகியவற்றைப்