பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 155

பேதி, கொடுக்குமதை உண்டக்கால், கோமளமே!

பித்தம் அடுக்குமே மூக்குறட்டை ஆய் '

தேரன் வெண்பா:

' மூக்கிரட்டை யினிலை முறையுண வாதநோய் ஆக்கையில் பெட்டி அரவென அடங்குமே '

அகத்தியர் குண பாடத்தில் மூக்குறட்டை எனவும், தேரன் வெண்பாவில் மூக்கிரட்டை எனவும் இருப்பது காண்க. எனவே, மூக்கிரட்டை என்பது தற்செயலான பெயரே,

இரட்டை என்பதால், புகழ் புகழ்' என்னும் இரட்டைச் சொற்பெயர் இதற்குத் தரப்பட்டுள்ளது. இலக்கணத்தில் இது இரட்டைக் கிளவி எனப்படும்.

' இரட்டைக் கிளவி இரட்டில் பிரிந்திசையா ’ என்பது நன்னூல் (சொல்லதிகாரம்- பொதுவியல் -45ஆம்) நூற்பாவாகும். இரட்டைக் கிளவி என்றால், இரட்டைச் சொல்; இரட்டில் பிரிந்திசையா என்றால், இரட்டையி லிருந்து தனித் தனியாய்ப் பிரிந்து நின்று பொருள் தருவ தில்லை - என்பது கருத்து. எ. கா.:

அவர் கலகல’ எனப் பேசுவார் இவர் மளமள’ என வேலையை முடிப்பார்

இவற்றில் கலகல - மளமள என்பன இரட்டைக் கிளவியாம். கலகல என இரண்டு சொல்லாமல் கல’ என ஒன்று மட்டும் சொன்னாலும், மளமள என இரண்டு சொல்லாமல் 'மள’ என ஒன்றுமட்டும் சொன்னாலும், கல, மள என்பவற்றிற்குப் பொருள் இல்லை. ஏனவேதான், 'இரட்டில் பிரிந்திசையா எனப்பட்டது.