பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மர இனப் பெயர்கள்

அங்ங்னமெனில், புகழ் புகழ்' என்பது இரட்டைக் கிளவியாகாதே! புகழ்' என ஒரு புகழ் சொன்னாலும், இசை-கீர்த்தி எனப் பொருள் தருமே!-என வினவலாம். இதற்கு விடை: இங்கே புகழ் என்பது இசை-கீர்த்தி என்னும் பொருள் உடையதன்று. புகழ் என்பது ஒர் ஒலிக் குறிப்பாகும். குழந்தை வாழ்வாழ் எனக் கத்திற்று. அவர்கள் ஊழ்ஊழ் என ஊளையிட்டனர் என்பனபோல, அவர்கள் புகழ்புகழ்' எனப் பொருமினர் என்பதிலும் "புகழ்புகழ்' என்பதை ஒருவகை ஒலிக் குறிப்பாகக் கொள்ள வேண்டும். அங்ங்ணம் எனில், கல, மள,-என்பனபோலவே, புகழ் என்பதற்கும் தனித்த நிலையில் பொருள் இல்லை.

இரட்டில் பிரிந்திசையா இரட்டைக் கிளவிபோல, மூக்கும் இரட்டை அமைப்பு உடையதாக உள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. கண்கள் இரண்டு-காதுகள் இரண்டுகைகள் இரண்டு-கால்கள் இரண்டு. இவை இரண்டிரண் டாக-இரட்டையாக-இருப்பினும், தனித்தனியே பிரிந் துள்ளன. ஆனால், இரண்டு மூக்குகள் இல்லை; ஒரு மூக்கே, தனித்தனியாக - இரண்டு மூக்காகப் பிரிக்க முடியாதபடி-இரட்டைக்கிளவிபோல், இரண்டு துளைகளை யுடைய ஒரே அமைப்பாக இருக்கிறது. இந்தப் பொருத்த மும் இங்கே சுவை தருகின்ற தன்றோ !

எனவே, மூக்கிரட்டை என்னும் பெயரில் உள்ள இரட்டை என்பதை அடிப்படையாகக் கொண்டு, புகழ் புகழ்' என்னும் ஒலிக் குறிப்பாகிய இரட்டைக்கிளவி, சொல் விளையாட்டாக மூக்கிரட்டைக்கு இடப்பட்டது.

புகழ் மங்கை=வெள்ளெருக்கு இது. நம் நாட்டில் மண்ணை நிலமகள் எனவும், நீரைக் கங்காதேவி லனவும், கல்வியைக் கலைமகள் எனவும், செல்வத்தைத் திருமகள் எனவும், வீரத்தை மறமாள் (செயலட்சுமி) எனவும்