பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 157

பெண்ணாக உருவகித்துச் சொல்வது போலவே, புகழையும் புகழ்மங்கை, புகழ்மகள் எனப் பெண்ணாக உருவகித்துக் கூறுவதுண்டு. இ. சா.:

திவ்வியப் பிரபந்தம்:

" பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்

புகழ் மங்கை எங்கும் திகழ' - (1162)

கம்பராமாயணம்:

புகழ் மகளைத் தழுவிய' - (இராவணவதை-226) மேலுள்ள பாடல் பகுதிகளில், புகழ் மங்கை, புகழ் மகள் எனப் புகழ் உருவகிக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.

சினத்தின் நிறம் சிவப்பு அல்லது கறுப்பு என்பர்:

' கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள ’’ என்பது தொல்காப்பிய (சொல்-உரியியல்-75 ஆம்) நூற்பா, இதேபோல் புகழுக்கும் ஒரு நிறம் கூறப்பட்டுள்ளது. புகழின் நிறம், மாசு மறுவற்ற தூய வெண்மை நிறம் என்பது இலக்கிய மரபு. சிவப்பிரகாச அடிகளார், தமது பிரபுலிங்க லீலை எனும் நூலில், இதுபற்றி அழகாகக் கூறியுள்ளார்: சிவனது இருப்பிடம் கைலைமலை. கைலை வெண்மையான வெள்ளி நிறம் உடையது. கைலைக்கு வெள்ளிமலை என்னும் பெயரும் உண்டு. இந்த வெள்ளி மலையாகிய கைலை மலை எவ்வாறு உண்டாயிற்றாம்? சிவனது வெண்மையான புகழ் எல்லாம் ஒருங்கு திரண்டு கைலை மலையாக ஆனதாக அடிகளார் கூறியுள்ளார். அவர் கற்பனைக் களஞ்சியம் என்னும் பட்டப்பெயர் உடையவர் அல்லவா? பாடல்பகுதி:

' கள்ளழிந் தொழுகு செம்பொன்

கடுக்கைவேய்ந் திலகு வேணி