பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 159

கொடி இப்பெயர் பெற்றது. பண்டு தாலி செய்ய இக் கொடி பயன்பட்டிருக்கலாம்; இதனால் இக்கொடிக்குத் தாலிக் கொடி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். சார்பு;

பயன்,

இலட்சுமி மரம் (சி.வை.அ). சீத்தாமரம் இது. சீத்தா என்பது சீதையைச் சொல் விளையாட்டாகக் குறிக்கும். இலட்சுமியே சீதையாக வந்து தோன்றியதால், சீத்தா மரம் சொல் விளையாட்டாக இப்பெயர் பெற்றது.

கணி (மு.வை.அ): வேங்கை மரம் இது. கணி என்பது சோதிடனைக் குறிக்கும் பெயர். வேங்கை மரம் ஒரு சோதிடம் (கணிப்பு) சொல்வதால் 'கணி’ எனப்பட்டது. வேங்கை மரத்தின் அரும்பு அவிழுங்காலத்தில் தினைப் புனத்தில் தினை முற்றியிருக்குமாம். கானவர்கள், வேங்கை யின் அரும்பு அவிழ்வதைக் (விரிவதைக்) கண்டதும், தினை முற்றி விட்டது, இனி அறுவடை செய்யவேண்டும் எனக் கருதி அறுவடை தொடங்குவார்களாம். அதாவது, 'பருவத்தே பயிர் செய்’ என்னும் ஒளவையின் மொழிக் கேற்ப, ஆண்டுதோறும் குறித்த காலத்தில் தினை விதைப் பார்கள். அது முதிருங் காலம், வேங்கை அரும்பு அவிழும் காலமாக இயற்கையாக அமையும். இதைப் புலவர்கள், வேங்கை கணிப்பு (சோதிடம்) சொல்வதாகக் கற்பனை செய்துவிட்டனர். இலக்கியச் சான்று:- நற்றிணை - 373:

' காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்

பாவமை இதணம் ஏறிப் பாசினம் வணர் குரல் சிறுதினை கடியப் புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே’’

என்பது நற்றிணைப் பாடல் பகுதி. கருத்து - வேங்கை அரும்பு அவிழ்ந்து விட்டதால், நம்மவர்கள் தினையறுக்க வந்து விடுவர்; இனி நாளைமுதல், திணைப்புனம் காக்கும்